மீண்டும் இணைந்த விஷால், ஆர்யா!

நடிகர்களான விஷால் – ஆர்யா மீண்டும் இணையவுள்ளதாகவும் குறித்த திரைப்படத்தை ஆனந்த்ஷங்கர் இயக்கவுள்ளதாகவும் அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன. இந் நிலையில் தற்போது இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.

இது குறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்;

‘மினி ஸ்டுடியோஸ்’ தயாரிக்கும் நான்காவது படத்தில் விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடிக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படம் ‘மினி ஸ்டூடியோஸ்’ நிறுவனத்தின் ஒன்பதாவது தயாரிப்பு ஆகும்.

பிரபல ஒளிப்பதிவாளர் ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். இத்திரைப்படம் பல மொழிகளில் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் ராமோஜி பிலிம் சிட்டியில் பூஜையுடன் துவங்க இருக்கிறது. இதர தொழிநுட்ப கலைஞர்கள் பற்றிய தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.