கேப்ரில்லா – பாலாஜிக்கு இடையே காதல் மலருமா?

ஒவ்வொரு பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீசனிலும் ஒரு காதல் ஜோடி உருவாகி இறுதிவரை பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்பது தெரிந்ததே.

முதல் சீசனில் ஆரவ்-ஓவியா, இரண்டாவது சீசனில் மகத்-யாஷிகா, மூன்றாவது சீஸனில் கவின்-லொஸ்லியா ஜோடிகள் கடைசிவரை நிகழ்ச்சியை பரபரப்பாக கொண்டு சென்றனர்.

அந்த வகையில் இந்த சீசனின் காதல் ஜோடி யாராக இருக்கும் என்று நெட்டிசன்கள் விவாதம் செய்து கொண்டிருந்த நிலையில் நேற்று வெளியான மூன்றாவது புரமோவில் கேப்ரில்லா மற்றும் பாலாஜி ரொமான்ஸ் செய்வதையும் பின்னணியில் ‘யாரோ யாருக்கு இங்கு யாரோ’ என்ற பாடல் ஒலிப்பதையும் பார்க்கும் போது இருவருக்கும் இடையில் விரைவில் காதல் பத்திக்கொள்ள வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

கேப்ரில்லாவை கிண்டலுடன் பாலாஜி பேசுவதும் அவரை செல்லமாக அடிக்க கேப்ரில்லா கையை ஓங்குவதுமான காட்சிகளை பார்க்கும்போது விரைவில் ஒரு காதல் ஜோடி உருவாகும் என்றே தோன்றுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.