தற்கொலைக்கு முயன்ற பிரபல நடிகை: அதிர்ச்சியில் ரசிகர்கள்

download 2 5
download 2 5

மன அழுத்தம் காரணமாக தற்கொலைக்கு முயன்றதாக கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார் இளம் நடிகையான சனுஷா.

தமிழில் ரேணிகுண்டா படம் மூலம் பிரபலமானவர் நடிகை சனுஷா, தொடர்ந்து நாளை நமதே, அலெக்ஸ் பாண்டியன், கொடிவீரன் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் மன அழுத்தத்தால் தற்கொலைக்கு முயன்றதாக கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காணொளியில், கொரோனாவின் ஆரம்ப காலத்தில் சொந்த வாழ்விலும், தொழில் ரீதியாகவும் நிறைய சங்கடங்களை சந்தித்தேன்.

என் பிரச்சனையை யாருடன் பகிர்ந்து கொள்வது என தெரியாமல் மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளானேன்.

ஒரு கட்டத்தில் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துவிட்டேன், ஆனால் என் இறப்புக்கு பின்னர் என் தம்பி என்ன ஆவான் என்பதை யோசித்து அந்த முயற்சியை கைவிட்டு விட்டேன்.

பிறகு வைத்தியரை சந்தித்து மன அழுத்தத்துக்கான சிகிச்சை எடுத்தேன். அதன் பிறகு எனது மனதில் இருந்து சுமைகள் விலகி பழைய நிலைக்கு மாறினேன்.

என்னைப்போல் யாருக்கேனும் மன அழுத்தம் இருந்தால் அவர்கள் மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே இதனை சொல்கிறேன் என தெரிவித்துள்ளார்.