கைக்கு எட்டும் தூரத்தில் தேங்காய் விவசாயம் செய்த நடிகர் மாதவன்!

நடிகர் மாதவன் தனது தோட்டத்தில் உயரம் குறைந்த தென்னை மரங்களை வளர்த்து வருவதாகவும், அதில் கைக்கெட்டும் தூரத்தில் தேங்காய்கள் உள்ளதாகவும் தெரிவித்து தனது டுவிட்டரில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த டுவிட்டர் பதிவில் “இது ஒரு அருமையான திட்டம் என்றும் இந்த திட்டத்தின் மூலம் நாங்கள் மிக இனிப்பான சுவையான தேங்காய்களை விளைவிப்பதாகவும் இந்த உயரம் குறைந்த தேங்காய்களை தங்களுடைய தரிசு நிலத்தில் வளர்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இது குறித்த முழு விவரங்களுடன் கூடிய ஒரு கட்டுரை மிக விரைவில் வெளியிடப்படும் என்றும் அந்த கட்டுரை விவசாயிகளுக்கு மிகவும் பயன்படும் வகையில் இருக்கும் என்றும் நடிகர் மாதவன் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

இந் நிலையில் தென்னை மர வளர்ப்பில் புதிய புரட்சியை ஏற்படுத்திய மாதவனுக்கு விவசாயிகள் தரப்பில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.