ஆலியா பட்டின் இன்ஸ்டாகிராமைப் பின் தொடர்பவர்கள் எவ்வளவு பேர் தெரியுமா?

நடிகை ஆலியா பட்டின் இன்ஸ்டாகிராம் கணக்கைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 5 கோடியைக் கடந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பொலிவூட் திரையுலகின் முன்னணி நடிகையான ஆலியா பட் இயக்குனர் மகேஷ் பட்டின் மகளாவார். ஸ்டூடன்ட் ஆப் தி இயர் படத்தின் மூலம் அறிமுகமான அவர் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.

இந்நிலையில் அவருடைய சமூக ஊடக ரசிகர்களின் எண்ணிக்கை 5 கோடியைக் கடந்ததற்கு மனம் நெகிழ்ச்சியடைந்த ஆலியா பட் இந்த 5 கோடி அன்புள்ளங்களுக்கு நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.