கடந்த சில நாட்களுக்கு முன் ரஜினி உடல்நல குறைவாலும், கொரோனா காரணமாகவும் அரசியலிலிருந்து விலகுவதாக ஒரு அறிக்கை இணையத்தில் பரவியது.
மேலும் இது குறித்து ரஜினி தனது டுவிட்டர் பக்கத்தில் அந்த அறிக்கையை தான் வெளியிடவில்லை, ஆனால் அதில் கூறியிருந்த விஷயங்கள் உண்மை.
ரஜினி ரசிகர்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து என் அரசியல் நிலைப்பாட்டை குறித்து மக்களிடம் அறிவிப்பேன் என நேற்று அறிக்கை ஒன்றை ரஜினி வெளியிட்டு இருந்தார்.
அதனை தொடர்ந்து ஓட்டுன்னு போட்டா ரஜினிக்கு தான் என டுவிட்டரில் ட்ரெண்ட் செய்தனர். மேலும் தற்போது ‘நீங்க வாங்க ரஜினி, எங்கள் ஆதரவு உங்களுக்கு தான்’ என தெருக்கள் முழுக்க பதாதைகளை ஒட்டப்பட்டுள்ளது.