தனுஷின் ஜகமே தந்திரம் திரைப்படம் பற்றிய அறிவிப்பு வெளியானது

dhanush
dhanush

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து விரைவில் வெளிவரவுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம்.இத் திரைப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சஞ்சனா நடராஜன் ஆகியோர் நடித்துள்ளதோடு முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் ஜேம்ஸ் காஸ்மோவும் நடித்துள்ளார்.

அந்தவகையில் இத்திரைப்படத்தின் “ரகிட ரகிட” என்ற பாடல் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இப்படத்தின் இரண்டாவது பாடலானது தீபாவளி தினத்தை முன்னிட்டு நவம்பர் 13 ஆம் திகதி வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.