பிக்பொஸ் புகழ் லொஸ்லியாவின் தந்தை காலமானார்!

2 1
2 1

இலங்கையைச் சேர்ந்த பிக்பொஸ் பிரபலம் லொஸ்லியாவின் தந்தை மரியநேசன் நேற்றிரவு உயிரிழந்துள்ளார் என்று அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த வருடம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பொஸ் சீசன் 3 நிகழ்ச்சியில், இலங்கையிலிருந்து சென்ற லொஸ்லியா பங்கேற்று மிகவும் பிரபலமானர்.

திருகோணமலையைச் சேர்ந்த இவரின் தந்தை மரியநேசன் கனடாவில் வசித்து வந்தார். பின் அவர் பிக்பொஸ் வீட்டுக்கு வந்து தன் மகள் லொஸ்லியாவைப் பார்த்துவிட்டுச் சென்றார்.

தற்போது லொஸ்லியா இந்தியத் திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில், அவரின் தந்தையான மரியநேசன் மாரடைப்பு காரணமாக நேற்றிரவு உயிரிழந்துவிட்டார்.

இந்த மறைவுச் செய்தி லொஸ்லியாவின் இரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.