ஷாருக்கானின் அடுத்த படத்தை இயக்குவது இவர்தானாம்: மகிழ்ச்சியில் ரசிகர்கள்

811465 srk 041119
811465 srk 041119

நடிகர் ஷாருக் கான் இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டாராக விளங்குபவர், இவருக்கு உலகமுழுவதிலும் ரசிகர்கள் உள்ளனர்.

இவர் நடிப்பில் கடைசியாக ஜீரோ திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியானது.

மேலும் பிரபல தமிழ் இயக்குனரான அட்லீ தான் ஷாருக் கானின் அடுத்த திரைப்படத்தை இயக்குவார் என கூறப்பட்டது, அதேபோல் இவர்கள் இருவரின் சந்திப்பும் பெரிய அளவில் பேசப்பட்டது.

இந்நிலையில் தற்போது நடிகர் ஷாருக்கான் அடுத்ததாக இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பதான் என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தில் அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோண் நடிக்கின்றார், மேலும் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.