நடிகர் உதயநிதி ஸ்டாலின் கைது!

udhayanidhistalin 1605771629
udhayanidhistalin 1605771629

தமிழகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அதிமுக, திமுக உட்பட அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன.

இந் நிலையில் நடிகரும் திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் நேற்றைய தினம் திருக்குவளையில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியபோது அங்கு அனுமதியின்றி தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட குற்றச்சாட்டில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

இதனையடுத்து உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து நீடாமங்கலம்-மன்னார்குடி வீதியில் திமுகவினர் வீதி மறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.