நடிகை த்ரிஷாவின் மலரும் நினைவுகள்!

samayam tamil 4
samayam tamil 4

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான த்ரிஷா யுனிசெப் இந்தியாவின் நல்லெண்ண தூதராக பதவியேற்று 3 வருடங்களாகியுள்ளதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்த காணொலி ஒன்றினையும் அவர் வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் குழந்தைகளை நலனைப் பேணுவதும், குழந்தைகள் நலன்களை மேம்படுத்துவது மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் இழப்புகளை குறைப்பது உள்ளிட்ட பணிகளில் யுனிசெப் அமைப்பு ஈடுபட்டு வருகிறது.

குழந்தைகள் நலனை மேம்படுத்துவதற்காக சமூக பங்களிப்பு மற்றும் ஒருங்கிணைந்த சமூக கொள்கை அணுகுமுறை மூலம் சமூக சூழலை உருவாக்கி வலுப்படுத்துவதே இந்த அமைப்பின் நோக்கமாகும்.