விஜய் சேதுபதிக்கு பதிலாக பிரபல நடிகருக்கு வில்லனாகும் விக்ரம்

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது ஒரே நேரத்தில் சுமார் பல படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அவற்றில் பாதி திரைப் படங்களின் படப்பிடிப்புக்கள் முடிவடைந்து வெளியாகத் தயாராக இருக்கின்றன.

இந் நிலையில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அல்லு அர்ஜுன் நடித்து வரும் ’புஷ்பா’ என்ற படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகி வருகிறது. இந்த படத்தின் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமாகி இருந்த நிலையில் திடீரென அவர் இந்த படத்தில் இருந்து விலகினார்

இந் நிலையில் இந்த படத்தின் வில்லன் கதாபாத்திரத்திற்கு விஜய்சேதுபதிக்கு பதிலாக விக்ரம் நடிக்க இருப்பதாக ஒரு சில ஊடகங்களில் தகவல்கள் வெளிவந்தன. ஆனால் விக்ரம் தரப்பிலிருந்து இச் செய்தியை மறுத்துள்ளனர்

‘புஷ்பா’ படத்தில் வில்லனாக நடிக்க எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றும் இது முழுக்க முழுக்க தவறான தகவல் என்றும் விக்ரம் தரப்பினர் தெரிவித்துள்ளனர். ’புஷ்பா’ படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருந்த வில்லன் வேடத்தில் வேறு எந்த நடிகர் நடிக்க உள்ளார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.