இன்றைய நாள்(11.12.2020) உங்களுக்கு எப்படி?

senganthal rasipalan 1 4
senganthal rasipalan 1 4

மேஷம்

கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்துபோகும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். தாய்வழி உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள். வேற்று மதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். மகிழ்ச்சியான நாள்.

ரிஷபம்

பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். பூர்வீக சொத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்து கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்

மிதுனம்

மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

கடகம்

சில வேலைகளை விட்டு கொடுத்து முடிப்பீர்கள். வீடு வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். பணப் பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத நன்மை உண்டாகும் நாள்.

சிம்மம்

குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். சாதிக்கும் நாள்.

கன்னி

கணவன்-மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மகிழ்ச்சி கிட்டும் நாள்.

துலாம்

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். மற்றவரிடம் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். உங்களின் அணுகுமுறையை மாற்றுங்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் பொறுமை தேவை. விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

விருச்சிகம்

கணவன்-மனைவிக்குள் அனுசரித்து போவது நல்லது. முக்கிய கோப்புகளை கையாளும்போது அலட்சியம் வேண்டாம். சகோதர வகையில் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.

தனுசு

சமோஜதகமாவும் சாதுர்யமாகவும் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் உறவினர் நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். இனிமையான நாள்.

மகரம்

பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். முயற்சி பலிதமாகும் நாள்.

கும்பம்

கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். உறவினர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சாதிக்கும் நாள்.

மீனம்

சந்திராஷ்டமம் இருப்பதால் முன் கோபத்தை குறையுங்கள். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். உத்தியோகத்தில் பிறரின் குறைகளை சுட்டிக்காட்ட வேண்டாம். பொறுமை தேவைப்படும் நாள்.