இன்று சந்திராஷ்டமம் ஆட்டிப்படைக்கப்போகும் ராசிக்காரர் நீங்களா?

12
mesam

மேஷம்:- மேஷ ராசிக்காரர்கள் தன் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனைவி வழியில் பக்கபலமாக இருப்பார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் உண்டு.  உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

risapam

ரிஷபம்:-ரிஷப ராசிக்காரர்களுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும் அரசு காரியங்கள் சாதகமாக முடியும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில்  உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். அமோகமான  நாள்.

mithunam

மிதுனம்:-மிதுன ராசிக்காரர்களுக்கு வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். அனுபவ அறிவால் முன்னேறும் நாள்.

kadakam

கடகம்: -கடக ராசிக்காரர்களுக்கு பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாயாருக்கு மருத்துவசெலவுகள் ஏற்படும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில்  நிம்மதி உண்டு.எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

சிம்மம்:- சிம்ம ராசிக்காரர்களுக்கு துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பூர்வீக சொத்து பிரச்சினைக்கு தீர்வுகிடைக்கும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளை ஏற்பீர்கள். வெற்றி பெறும் நாள்.

கன்னி:- கன்னி ராசிக்காரர்களுக்கு கணவன்-மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். புதிய எண்ணங்கள் பிறக்கும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில்  பணிகளை விரைந்து முடிப்பீர்கள். உற்சாகமான நாள்.

thulam

துலாம்:-துலாம் ராசிக்காரர்களுக்கு ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிக்கலான சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துகொண்டிருக்காதீர்கள். மற்றவர்கள் விஷயத்தில் அனாவசியமாக தலையிட வேண்டாம். வியாபாரத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். நாவடக்கம் தேவைப்படும் நாள்.

scorpio 08 1

விருச்சிகம்:-விருச்சிக ராசிக்காரர்களுக்கு மறைமுக விமர்சனங்களும் தாழ்வுமனப்பான்மையும் வந்து செல்லும். பிள்ளைகளிடம் கனிவாக பேசுங்கள். வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். உடல் அசதி சோர்வு வந்து நீங்கும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில்  சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

thanu

தனுசு: -தனுசு ராசிக்காரர்களுக்கு சவாலான விஷயங்களை கூட சாமர்த்தியமாகப் பேசி முடிப்பீர்கள். பெற்றோரின் ஆதரவு பெருகும் நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். மனதிற்கு இதமான செய்தி வரும். வியாபாரத்தில் புது இடத்திற்குகடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

magaram

மகரம்:-மகர ராசிக்காரர்களுக்கு கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். உறவினர் நண்பர்களால் ஆதாயம் உண்டு. செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில்  அதிகாரிகள் பாராட்டுவார்கள். சாதிக்கும் நாள்.

kumpam

கும்பம்:-கும்ப ராசிக்காரர்களுக்கு குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். மனசாட்சி படி செயல்படும் நாள்.

meenam

மீனம்:-மீன ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். விமர்சனங்களை கண்டுஅஞ்ச வேண்டாம். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாறவேண்டாம். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.