இன்று சந்திராஷ்டமம் ஆட்டிப்படைக்கப் போகும் ராசிக்காரர் நீங்களா ?

20

மேஷம்:-மேஷ ராசிக்காரர்களே உங்களின் அணுகுமுறையைமற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்து கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழைபொழிவார்கள். வியாபாரத்தில் புதுத்தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும் திட்டங்கள் நிறைவேறும் நாள்.

ரிஷபம்:- ரிஷப ராசிக்காரர்களே மற்றவர்களால் செய்யமுடியாத செயற்கரிய காரியங்களையெல்லாம் முடித்து காட்டுவீர்கள். உறவினர் நண்பர்களால் ஆதாயம் உண்டு. திடீர் சந்திப்புகள் நிகழும்.வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். சாதித்து காட்டும் நாள்.

மிதுனம்:- மிதுன ராசிக்காரர்களே புதுப் பொலிவுடன் உற்சாகமடைவீர்கள். குடும்பத்தில் இருந்துவந்த கூச்சல் குழப்பம் விலகும்.வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும்.உத்தியோகத்தில் சிறப்பாக செயல்பட்டு பாராட்டினை பெறுவீர்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.

கடகம்: -கடக ராசிக்காரர்களே சந்திராஷ்டமம் தொடர்வதால் வேலைச்சுமையால் பதற்றம் அதிகரிக்கும். மற்றவர்களை முழுமையாக நம்பி கொண்டிருக்க வேண்டாம். உத்தியோகத்தில் ஊழியர்களால் உங்கள் பெயர்கெடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.

சிம்மம்:- சிம்ம ராசிக்காரர்களே தன்னம்பிக்கையுடன் எதையும் செய்ய தொடங்குவீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் அமைதி நிலவும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

கன்னி:- கன்னி ராசிக்காரர்களே பணப்புழக்கம் அதிகரிக்கும். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். அரசால் அனுகூலம் உண்டு. எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் புதுஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். திடீர் யோகம் கிட்டும் நாள்.

துலாம்:- துலாம் ராசிக்காரர்களே குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். புதியவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். மனதில் நிறைவு பெறும்நாள்.

விருச்சிகம்:-விருச்சிக ராசிக்காரர்களே முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

தனுசு:-தனுசு ராசிக்காரர்களே குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். வெற்றி பெறும் நாள் .

மகரம்: -மகர ராசிக்காரர்களே கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதுதொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புதிய பாதை தெரியும் நாள்.

கும்பம்:- கும்ப ராசிக்காரர்களே ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். சாலைகளை கவனமாக கடந்து செல்லுங்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். விட்டு கொடுத்து
போக வேண்டிய நாள்.

மீனம்:-மீன ராசிக்காரர்களே எளிதில் முடித்துவிடலாம் என நினைத்த காரியம் கூட இழுபறியாக போய் முடியும். சகோதரர்களை பகைத்து கொள்ளாதீர்கள். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.
இன்று சந்திராஷ்டமம் ஆட்டிப்படைக்கப் போகும் ராசிக்காரர் நீங்களா ?