இன்றைய நாள்(27.12.2020) உங்களுக்கு எப்படி அமைந்திருக்கு!

senganthal rasipalan 1
senganthal rasipalan 1
mesam

மேஷம்:-மேஷ ராசிக்காரா்களே கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டு. பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

risapam

ரிஷபம்: -ரிஷப  ராசிக்காரா்களே ராசிக்குள் சந்திரன் இருப்பதால் வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். பண விஷயத்தில் சாக்குப் போக்கு சொல்லி சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். பொறுமைத் தேவைப்படும் நாள்.

mithunam

மிதுனம்:- மிதுன ராசிக்காரா்களே கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். அரசு காரியங்கள் இழுபறியாகும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில்  சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். கவனமுடன் நடந்து கொள்ள வேண்டிய நாள்.

kadakam

கடகம்: -கடக ராசிக்காரா்களே எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். வீடு மனை வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். எண்ணங்கள் நிறைவேறும் நாள்.

சிம்மம்:-சிம்ம ராசிக்காரா்களே  கடந்த கால சுகமான அனுபவங்கள் எல்லாம் மனதில் நிழலாடும். உறவினர் நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். அலுவலகத்தில் மரியாதை கூடும். புகழ் பெறும் நாள்.

கன்னி: -கன்னி ராசிக்காரா்களே குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். திருப்பங்கள் ஏற்படும் நாள்.

thulam

துலாம்:- துலாம் ராசிக்காரா்களே சந்திராஷ்டமம் இருப்பதால் சில விமர்சனங்களுக்கும் கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். அடுத்தவர்களை குறைக் கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் ஈகோ அதிகரிக்கும். வேலைச்சுமை மிகுந்த நாள்.

scorpio 08 5
scorpio 08 5

விருச்சிகம்:- விருச்சிக ராசிக்காரா்களே மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் உறவினர்களால் ஆதாயமும் உண்டாகும். விலை உயர்ந்த மின்னணு மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். வாகனத்தைச் சீர்செய்வீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்தியோகத்தில்  புது சலுகைகள் கிடைக்கும். நன்மை கிட்டும் நாள்.

thanu

தனுசு:- தனுசு ராசிக்காரா்களே குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில்  உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். வெற்றி பெறும் நாள்

magaram

மகரம்:-மகர ராசிக்காரா்களே மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்

kumpam

கும்பம்:-கும்ப ராசிக்காரா்களே திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். வீடு வாகனப் பராமரிப்புச் செலவுகள் வந்து போகும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

meenam

மீனம்:-  மீன ராசிக்காரா்களே துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். மனதிற்கு இதமான செய்தி வரும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில்  உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். தைரியம் கூடும் நாள்.