இன்று சந்தோசத்தில் திழைக்கப் போகும் ராசிக்காரர் நீங்களா?

mesam

மேஷம்:- மேஷ ராசிக்காரர்களே திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். விருந்தினர்களின் வருகை உண்டு. வியாபாரத்தில் கமிஷன் ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில்  உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். துணிச்சலுடன் செயல்பட வேண்டிய நாள்.

risapam

ரிஷபம்:- ரிஷப ராசிக்காரர்களே கணவன்-மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். முன் கோபம் குறையும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். உறவினர்களால் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். மகிழ்ச்சியான நாள்.

mithunam

மிதுனம்:-மிதுன ராசிக்காரர்களே  ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒரே நேரத்தில் இரண்டு மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். வியாபாரத்தில் புது முயற்சிகளைத் தவிர்க்கவும். உத்தியோகத்தில் மற்றவர்களின் குறைகளில் கவனம் செலுத்த வேண்டாம். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.

kadakam

கடகம்:-கடக ராசிக்காரர்களே இன்றைய தினம் வேலைச்சுமையால் சோர்வு அடைவீர்கள்.  அனாவசிய செலவுகளை குறைக்கப் பாருங்கள். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. நட்பு வட்டம் விரியும் வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில்  சக ஊழியர்களை விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பொறுமை தேவைப்படும் நாள்.

சிம்மம்:- சிம்ம ராசிக்காரர்களே புதிய கோணத்தில் யோசித்து பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி வகை பிறக்கும். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள் . உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளும் நாள்.

கன்னி: -கன்னி ராசிக்காரர்களே நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். உறவினர் நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள்வார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். நன்மை நிறைந்த நாள்.

thulam

துலாம்:-துலாம் ராசிக்காரர்களே குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.

scorpio 08
scorpio 08

விருச்சிகம்:- விருச்சிக ராசிக்காரர்களே சந்திராஷ்டமம் இருப்பதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை குறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள். தொழில் வியாபாரத்தில் வேலையாட்களிடம் அது பற்றிய ரகசியங்களை சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். விழிப்புணர்வு தேவைப்படும் நாள்.

thanu

தனுசு: -தனுசு ராசிக்காரர்களே உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். பிள்ளைகளால் மதிப்பு கூடும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

magaram

மகரம்:-மகர ராசிக்காரர்களே குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். விருந்தினர்களின் வருகையால் வீடுகளைக் கட்டும். வீட்டில்உற்சாகம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த இடத்திற்கு சென்று வருவீர்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். நல்லது நடக்கும் நாள்.

kumpam

கும்பம்: -கும்ப ராசிக்காரர்களே புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில்  திருப்தி உண்டாகும். கனவு நனவாகும் நாள்.

meenam

மீனம்: -மீன ராசிக்காரர்களே எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். புது வேலை கிடைக்கும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.