இன்றைய நாள் உங்களுக்கு எப்படி அமைந்திருக்கு!

03
03
mesam
mesam

மேஷம்:-மேஷ ராசிக்காரர்களே புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்க தொடங்குவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். நினைத்தது நிறைவேறும் நாள்.

risapam

ரிஷபம்:-ரிஷப ராசிக்காரர்களே திட்டமிட்ட வேலைகள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். புது வேலை அமையும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

mithunam

மிதுனம்:- மிதுன ராசிக்காரர்களே துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். சொத்துப் பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். வெற்றி பெறும் நாள்.

kadakam

கடகம்: -கடக ராசிக்காரர்களே குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். விலகிச்சென்ற உறவினர்கள்வலிய வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் லாபம்கணிசமாக உயரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புதிய பாதை தெரியும் நாள்.

சிம்மம்:-சிம்ம ராசிக்காரர்களே ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உணர்ச்சி வசப்பட்டு அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்து போகும். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

கன்னி:- கன்னி ராசிக்காரர்களே குடும்பத்தில் விட்டு கொடுத்துப் போவது நல்லது. யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். சொந்த பந்தங்களுடன் மனத்தாங்கல் வரும். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். வியாபாரத்தில் புதுமுதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் பிரச்சினைவரக் கூடும். எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாள்.

thulam

துலாம்:- துலாம் ராசிக்காரர்களே குடும்பத்தினரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்திசெய்வீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக்  கொடுப்பீர்கள். தாய்வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வீட்டை அழகுபடுத்துவீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில்  சக ஊழியர்கள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். புகழ் கௌரவம் கூடும் நாள்.

scorpio 08
scorpio 08

விருச்சிகம்:-விருச்சிக ராசிக்காரர்களே எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உடன் பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிடைக்கும். சிந்தனைத் திறன் பெருகும் நாள்

thanu

தனுசு: -தனுசு ராசிக்காரர்களே கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். நேர்மறை சிந்தனை பிறக்கும். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில்  புதிய சலுகைகள் கிடைக்கும். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.

magaram

மகரம்: -மகர ராசிக்காரர்களே சந்திராஷ்டமம் நீடிப்பதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும். உறவினர் நண்பர்களுடன் நெருடல்கள் வந்து நீங்கும். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் உயரதிகாரி குறை கூறுவார். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

kumpam

கும்பம்:- கும்ப ராசிக்காரர்களே பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் புதுவாய்ப்புகள் தேடி வரும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

meenam

மீனம்:-மீன ராசிக்காரர்களே குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். நெடுநாட்களாக பார்க்க நினைத்தஒருவர் உங்களை தேடி வருவார். திடீர் திடீரென்று அறிமுகமாகு பவரால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். உயர்வு கிடைக்கும் நாள்.