இன்று சந்திராஷ்டமத்தால் அவதியுறப் போகும் ராசிக்காரர் நீங்களா?

mesam

மேஷம்:-மேஷ ராசிக்காரர்களே குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். புதுமை படைக்கும் நாள்.

risapam

ரிஷபம்: -ரிஷப ராசிக்காரர்களே பால்ய நண்பர்கள் உதவுவார்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. புது வேலை அமையும். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில்  திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். உழைப்பால் உயரும் நாள்.

mithunam

மிதுனம்:- மிதுன ராசிக்காரர்களே உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக் கட்டும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில்  உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். தைரியமான முடிவுகள் எடுக்கும் நாள்.

kadakam

கடகம்: -கடக ராசிக்காரர்களே கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். அழகும் இளமையும் கூடும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்தியோகத்தில் உயரதிகாரி ஒத்துழைப்பார்.புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

சிம்மம்:-சிம்ம ராசிக்காரர்களே ராசிக்குள் சந்திரன் நுழைவதால் பல வேலைகளையும் இழுத்து போட்டு பார்க்க வேண்டி வரும். சாதாரணமாகப் பேசுவதைக்கூட சிலர் தவறாகப் புரிந்து கொள்வார்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். உத்தியோகத்தில்  வளைந்து கொடுத்து போவது நல்லது. சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

கன்னி: -கன்னி ராசிக்காரர்களே எதிர்பார்த்தவை தாமதமாக முடியும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். யாருக்கும் பணம் நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து போங்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

thulam

துலாம்: -துலாம் ராசிக்காரர்களே சமயோஜித புத்தியால் எல்லாப் பிரச்சினைகளையும் எளிதாக சமாளித்து வெற்றி பெறுவீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். மதிப்புக் கூடும் நாள்.

scorpio 08 1
scorpio 08 1

விருச்சிகம்:-விருச்சிக ராசிக்காரர்களே கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமை வெளிப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

thanu

தனுசு:-தனுசு ராசிக்காரர்களே கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் முழுவதுமாக நீங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப்போன விஷயங்கள் முடியும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். தடைகள் உடைபடும் நாள்.

magaram

மகரம்:- மகர ராசிக்காரர்களே  சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்

kumpam

கும்பம்:-  கும்ப ராசிக்காரர்களே தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்குவீர்கள். சகோதர வகையில் உதவிகள் உண்டு. கல்யாணப் பேச்சுவார்த்தை வெற்றியடையும். மனைவி வழி உறவினர்கள் முக்கியத்தும் தருவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் மதிப்பு கூடும். திறமைகள் வெளிப்படும் நாள்.

meenam

மீனம்:-மீன ராசிக்காரர்களே குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகளிடம் ராஜதந்திரத்தை கற்று கொள்வீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.