இன்றைய நாள்(14.01.2021) உங்களுக்கு எப்படி?

senganthal rasipalan 1 1
senganthal rasipalan 1 1

மேஷம்

அனுபவப்பூர்வமாகவும் அறிவுப்பூர்வமாகவும் பேசி எல்லோரையும் கவர்வீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வியாபாரம் தழைக்கும். உத்தியோகத்தில் அதிகாரி நம்பிக்கையை பெறுவீர்கள். சாதிக்கும் நாள்.

ரிஷபம்

கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். பாதியில் நின்ற வேலைகள் அனைத்தும் இனிதே முடியும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்லசெய்தி வரும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் மேலதிகாரி மதிப்பார். மகிழ்ச்சியான நாள்.

மிதுனம்

சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டாம். உங்களை யாரும் கண்டுகொள்வதில்லை உங்களுக்கு யாரும் முக்கியத்துவம் தருவதில்லை என்றெல்லாம் புலம்புவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாக பழகுங்கள். உத்தியோகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். பொறுமைத் தேவைப்படும் நாள்.

கடகம்

உங்கள் பலம், பலவீனத்தை உணர்வீர்கள். கல்யாண பேச்சுவார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். உத்தியோகத் தில் மேலதிகாரி உங்களை நம்பி பொறுப் புகளை ஒப்படைப்பார். திறமைகள் வெளிப்படும் நாள்.

சிம்மம்

குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். பழைய சரக்குகள் விற்கும். வியாபாரத்தில் உங்களின் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் அதிகாரி பாராட்டுவார். தொட்டது துலங்கும் நாள்.

கன்னி

புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் உயர்கல்வி உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள். நீண்டநாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்று வீர்கள். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை உணர்வீர்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.

துலாம்

எதிர்பார்ப்புகள் சில தள்ளிப்போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாயாருக்கு கருத்து மோதல்கள் வந்து செல்லும். புது வேலை கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உயர்வு பெறும் நாள்.

விருச்சிகம்

துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். வெற்றிக்கு வித்திடும் நாள்.

தனுசு

கடந்த 2 நாட்களாக இருந்த அலைச்சல். டென்ஷன். கோபம் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்களை உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். உற்சாகமான நாள்.

மகரம்

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் வேலைச்சுமை இருந்து கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்கி தவிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.

கும்பம்

விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளை பிரிந்து கொள்ளுங்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

மீனம்

எதிர்பார்ப்புகள் நிறை வேறும். பெற்றோர் பக்கபலமாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். புகழ், கௌரவம் கூடும் நாள்.