இன்றைய நாள் உங்களுக்கு எப்படி அமைந்திருக்கு!

17
17
mesam
mesam

மேஷம்:- மேஷ ராசிக்காரர்களே தவறு செய்பவர்களை தட்டி கேட்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வீட்டை அழகுபடுத்துவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும் . தைரியமான முடிவு எடுக்கும் நாள்.

risapam

ரிஷபம்:- ரிஷப ராசிக்காரர்களே எதிர்பாராத சந்திப்பு நிகழும். வாகன வசதிப் பெருகும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சவால்களில் வெற்றி பெறுவீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். சாதிக்கும் நாள்.

mithunam

மிதுனம்:- மிதுன ராசிக்காரர்களே உங்கள் செயலில் வேகம்கூடும். பிள்ளைகளால் மதிப்பு கூடும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். நீண்ட நாள் பிரச்சினைக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரம் செழிக்கும். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

kadakam

கடகம்:-கடக ராசிக்காரர்களே சந்திராஷ்டமம் இருப்பதால் முன்கோபத்தை தவிருங்கள். தடைப்பட்ட வேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார் தான். உத்தியோகத்தில் வேலைச்சுமை ஓரளவு குறையும். திட்டமிட்டுச் செயல்படுவதன் மூலம் வெற்றி பெறும் நாள்.

சிம்மம்:- சிம்ம ராசிக்காரர்களே கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். பண விஷயத்தில் கறாராக இருங்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேல் அதிகாரியின் முக்கிய அறிவுரை கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.

கன்னி: -கன்னி ராசிக்காரர்களே எதிர்பாராத தனவரவு உண்டு. உறவினர் நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள்வார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

thulam

துலாம்:-துலாம் ராசிக்காரர்களே மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். பழைய கடன் பிரச்சினை ஒன்றும் தீரும். வியாபாரத்தில் புதுதொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் பெரியபொறுப்புகள் தேடி வரும். நினைத்தது நிறைவேறும் நாள்.

scorpio 08 1
scorpio 08 1

விருச்சிகம்: -விருச்சிக ராசிக்காரர்களே எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். வீடு வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். வெற்றி பெறும் நாள்.

thanu

தனுசு:- தனுசு ராசிக்காரர்களே உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். சொந்த பந்தங்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். சிறப்பான நாள்.

magaram

மகரம்: -மகர ராசிக்காரர்களே குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வேண்டிய உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். தைரியம் கூடும் நாள்.

kumpam

கும்பம்:-கும்ப ராசிக்காரர்களே ராசிக்குள் சந்திரன் இருப்பதால் திட்டமிடாத செலவுகளும் பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக்கொள்வது நல்லது. மாலையிலிருந்து மகிழ்ச்சி தொடங்கும் நாள்.

meenam

மீனம்:- மீன ராசிக்காரர்களே குடும்பத்தை பற்றிய கவலைகள் வந்து நீங்கும். யாருக்கும் பணம் நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். சகோதர வகையில் பிணக்குகள் வரும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.