இன்றைய நாள் உங்களுக்கு எப்படி அமைந்திருக்கு!

23
23
mesam

மேஷம்:-மேஷ ராசிக்காரர்களே இங்கிதமான பேச்சால் எல்லோரையும் கவருவீர்கள். பிள்ளைகளின் புது முயற்சிகளை ஆதரிப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி  வரும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

risapam

ரிஷபம்:-ரிஷப ராசிக்காரர்களே ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்துகொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். மனதில் பட்டதை பளிச்சென்று பேசி மற்றும் விமர்சனத்திற்கு உள்ளாவீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.

mithunam

மிதுனம்:-மிதுன ராசிக்காரர்களே எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். பிள்ளைகளிடம் எதிர்மறையாக பேசாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சினைகள் வரக்கூடும். உத்தியோகத்தில் சகஊழியர்களுடன் விட்டு கொடுத்து போவது நல்லது. தைரியமுடன் செயல்பட வேண்டிய நாள்

kadakam

கடகம்: -கடக ராசிக்காரர்களே எதிலும் வெற்றி பெறுவீர்கள். சொந்த பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். புது பொருள் வந்து சேரும்.வியாபாரத்தில் நவீன யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். அனுபவ அறிவால் சாதிக்கும் நாள்.

சிம்மம்:-சிம்ம ராசிக்காரர்களே உங்களின் நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பிரபலங்கள் உதவுவார்கள். பழைய கடன் பிரச்சினை கட்டுக்குள் வரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். மதிப்புக் கூடும் நாள்.

கன்னி: -கன்னி ராசிக்காரர்களே கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியையோசிப்பீர்கள். பிள்ளைகள் குடும்பசூழ்நிலை அறிந்து செயல்படு வார்கள். பிரச்சினைகளுக்கு யதார்த்தமான முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவு குறையும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.

thulam

துலாம்:-துலாம் சந்திராஷ்டமம் இருப்பதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை இருக்கும். குடும்பத்தில் எல்லாவற்றையும் இழுத்து போட்டுபார்க்க வேண்டி வரும். தர்ம சங்கடமான சூழலில் சிக்கிக் கொள்வீர்கள். பேச்சில் காரம் வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பு குறையும். உத்தியோகத்தில் அதிகாரிகளிடம் ஈகோ பிரச்சினை வந்து நீங்கும்.  நல்லன நடக்கும் நாள்.

scorpio 08 2
scorpio 08 2

விருச்சிகம்:-விருச்சிக ராசிக்காரர்களே உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சுமுகமாக முடியும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. புது தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

thanu

தனுசு: -தனுசு ராசிக்காரர்களே பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து   உயரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும்.  வாகன வசதிப் பெருகும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.

magaram

மகரம்:- மகர ராசிக்காரர்களே வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் உறவினர்களால் ஆதாயமும் உண்டு.அனாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும். கனவு நனவாகும் நாள்.

kumpam

கும்பம்: -கும்ப ராசிக்காரர்களே எதிர்ப்புகள் அடங்கும். பிள்ளைகளால் ஆறுதல் கிடைக்கும். வீடு வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

meenam

மீனம்:-மீன ராசிக்காரர்களே குடும்பத்தினர் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வருகையால் வீடு களைக்கட்டும். அரசால் ஆதாயம் உண்டு. வேற்றுமதத்தவர்கள் அறிமுகமா வார்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் சில நுணக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். வெற்றி பெறும் நாள்.