இன்று பணவரவால் சந்தோசப்படும் ராசிக்காரர் நீங்களா?

03
03
mesam

மேஷம்:- மேஷ ராசிக்காரர்களே பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். மனதிற்கு பிடித்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள். மனைவி வழி உறவினர்கள் மதிப்பார்கள். புது நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். எதிர்பார்த்த வேலைகள் முடியும் நாள்.

risapam

ரிஷபம்:-ரிஷப ராசிக்காரர்களே எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர் நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். நாடி வந்தவர்களுக்கு உதவுவீர்கள். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தொட்டது துலங்கும் நாள்.

mithunam

மிதுனம்:- மிதுன ராசிக்காரர்களே குடும்பத்தினருடன் நேரத்தை செலவழிப்பீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள்.  உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். நல்லன நடக்கும் நாள்.

kadakam

கடகம்:- கடக ராசிக்காரர்களே தடைகளை கண்டு தளர மாட்டீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புது வேலை கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு. வாகன வசதிப்பெருகும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும்.  உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

சிம்மம்: -சிம்ம ராசிக்காரர்களே குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில்  அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.

கன்னி: -கன்னி ராசிக்காரர்களே கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். புதிதாக ஆடை ஆபரணம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி  செய்வீர்கள்.உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். நல்ல மாற்றங்கள் ஏற்படும் நாள்.

thulam

துலாம்- துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி புதிய தெளிவு பிறக்கும். நீங்கள் எடுக்கும் முடிவுகளில் உறுதியாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தாங்கள் பணிபுரியும் வேலையின் மேல் அக்கறை அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கப்பெறும். கணவன்-மனைவி இடையே அன்பு அதிகரித்து காணப்படும்.

scorpio 08 6
scorpio 08 6

விருச்சிகம்- விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்வரும் துயரங்களை துச்சமாக நினைக்கும் மன வலிமை பிறக்கும். எது வந்தாலும் பார்த்துக் கொள்வேன் என்கிற உறுதியான மனோதிடம் அதிகரிக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய நவீன உபகரணங்கள் வாங்கும் யோகம் உண்டு. குடும்பத்தில் அமைதி நிலவும்.

thanu

தனுசு- தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் உங்களுடைய பலம் அறிந்து செயல்படுவீர்கள். உங்கள் உடன் இருப்பவர்களை உங்களை எதிர்க்கும் வாய்ப்புகள் இருப்பதால் எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் தொந்தரவு வெறுப்பை உண்டாக்கும் வகையில் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். கணவன் மனைவியிடையே சிறுசிறு சண்டை சச்சரவு ஏற்பட்டு மறையும்.

magaram

மகரம்- மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீண்ட நாள் கனவுகள் நிறைவேறக் கூடிய வாய்ப்புகள் அமையும். கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்வதன் மூலம் முன்னேற்றத்தை காணலாம். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மந்த நிலை காணப்பட்டாலும் பிரச்சினை இல்லை. கணவன் மனைவி இடையே மனம் விட்டு பேசிக் கொள்வது ஒற்றுமையை மேலும் வலுவாக்கும்.

kumpam

கும்பம்- கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் விலகி வெற்றிப் பாதை கிடைக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மன வலிமை அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. கணவன் மனைவிக்கு இடையே இருந்த மனக்குழப்பம் நீங்கும்.

meenam

மீனம் -மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான அமைப்பாக இருப்பதால் தொட்டதெல்லாம் துலங்கும். தடைபட்ட காரியங்கள் தடையில்லாமல் நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நண்பர்களின் ஆதரவு துணையாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு பெரிய தொகைகளின் மூலம் லாபம் கிடைக்கப்பெறும். பெண்களுக்கு உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.