இன்று கனிவாகப் பேசி காரியம் சாதிக்கும் ராசிக்காரர் நீங்களா?

12
12
mesam

மேஷம்:- மேஷ ராசிக்காரர்களுக்கு எதிலும் வெற்றி பெறுவீர்கள். பழைய சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளும் நாள்.

risapam

ரிஷபம்: -ரிஷப ராசிக்காரர்களுக்கு சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிடைக்கும். சிந்தனையுடன் செயல்பட்டு வெற்றி பெறும் நாள்.

mithunam

மிதுனம்:-மிதுன ராசிக்காரர்களுக்கு திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். புண்ணியஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வீடுவாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். சாதிக்கும் நாள்.

kadakam

கடகம்:- கடக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பழைய கசப்பான சம்பவங்களை பேசி கொண்டிருக்க வேண்டாம். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்தியோகத்தில் பிறரின் குறைகளை சுட்டிக்காட்ட வேண்டாம். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

சிம்மம்: – சிம்ம ராசிக்காரர்களுக்கு கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். வாகன பழுதை சரிசெய்வீர்கள். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.

கன்னி-:கன்னி ராசிக்காரர்களுக்கு கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் புது உத்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். தொட்டது துலங்கும் நாள்.

thulam

துலாம்: -துலா ராசிக்காரர்களுக்கு குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் சகஊழியர்களுக்கு உதவுவீர்கள். பரிசு பாராட்டு கிடைக்கும் நாள்.

scorpio 08 2
scorpio 08 2

விருச்சிகம்:- விருச்சிக ராசிக்காரர்களுக்கு புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். எதிர்பார்த்த தொகை வராவிட்டாலும் எதிர்பாராத வகையில் பணம் வரும். வீடு வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். நன்மை கிட்டும் நாள்.

thanu

தனுசு:-தனுசு ராசிக்காரர்களுக்கு உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகளால் சமுக அந்தஸ்து உயரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வீட்டை அழகுபடுத்துவீர்கள். வியாபாரத்தில் அதிரடியாக லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். நினைத்ததை முடிக்கும் நாள்.

magaram

மகரம்: -மகர ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். அழகும் இளமையும் கூடும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். உற்சாகமான நாள்.

kumpam

கும்பம்:- கும்ப ராசிக்காரர்களுக்கு ராசிக்குள் சந்திரன் இருப்பதால் அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டு கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. சிந்தனை திறன் உடன் இருக்க வேண்டிய நாள்.

meenam

மீனம்:-மீன ராசிக்காரர்களுக்கு குடும்பத்தினரை அனுசரித்து போங்கள். திடீர் பயணங்கள் செலவுகளால் திணறுவீர்கள். சகோதர வகையில் மனத்தாங்கல் வந்து நீங்கும். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து செல்லும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.