இன்று துணிச்சலாக சில முக்கிய முடிவுகளை எடுக்கும் ராசிக்காரர் நீங்களா?

13
13
mesam
mesam

மேஷம்:- மேஷ ராசிக்காரர்களுக்கு வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய கடன் பிரச்சினை கட்டுப்பாட்டிற்குள் வரும். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது சலுகைகள் கிடைக்கும். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். இனிமையான நாள்.

risapam

ரிஷபம்:-ரிஷப ராசிக்காரர்களுக்கு பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்துகொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். சாதிக்கும் நாள்.

mithunam

மிதுனம்: -மிதுன ராசிக்காரர்களுக்கு கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் நீங்கி மகிழ்ச்சி பொங்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.  உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புதிய மாற்றங்கள் ஏற்படும் நாள்.

kadakam

கடகம்:-கடக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் சிறுவார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும்.  உத்தியோகத்தில் சக ஊழியர்களை குறை கூறிக் கொண்டிருக்க வேண்டாம். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்

சிம்மம்:-சிம்ம ராசிக்காரர்களுக்கு சவாலாக தெரிந்த சில வேலைகள் சாதகமாக முடியும். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக அமையும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். வெற்றி பெறும் நாள்.

கன்னி:- கன்னி ராசிக்காரர்களுக்கு குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அதிகார பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்து கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

thulam

துலாம்:-துலா ராசிக்காரர்களுக்கு பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்குவீர்கள். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். நட்பு வட்டம் விரிவடையும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். கனவு நனவாகும் நாள்.

scorpio 08 2
scorpio 08 2

விருச்சிகம்:- விருச்சிக ராசிக்காரர்களுக்கு அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

thanu

தனுசு:-தனுசு ராசிக்காரர்களுக்கு உங்கள் வேலைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வீர்கள். துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். தைரியமுடன் செயல்படும் நாள்.

magaram

மகரம்:-மகர ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். வராது என்றிருந்த பணம் கைக்கு வந்து சேரும். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். உறவினர் நண்பர்களிடையே மதிப்பு உயரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும்.  மகிழ்ச்சி ஏற்படும் நாள்.

kumpam

கும்பம்:-கும்ப ராசிக்காரர்களுக்கு ராசிக்குள் சந்திரன் இருப்பதால் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். நண்பர்கள் உறவினர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். சிறுசிறு அவமானங்கள் வந்து நீங்கும். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்

meenam

மீனம்: -மீன ராசிக்காரர்களுக்கு சின்ன சின்ன வேலைகளையும் அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்தியோகத்தில் மற்றவர்களை விமர்சிக்க வேண்டாம். பொறுமைத் தேவைப்படும் நாள்.