இன்று துணிச்சலாக சில முக்கிய முடிவுகளை எடுக்கும் ராசிக்காரர் நீங்களா?

20
20
mesam
mesam

மேஷம்:-மேஷ ராசிக்காரர்களுக்கு கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். தோற்றப்பொலிவு கூடும். பாதியில் நின்ற வேலைகள் முடிவடையும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

risapam

ரிஷபம்:-ரிஷப ராசிக்காரர்களுக்கு ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு தாழ்வுமனப்பான்மை வந்து செல்லும். தன்னம்பிக்கை குறையும். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் தவறுகளை சுட்டிக்காட்டினால் மாற்றிக்கொள்வது நல்லது. பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய நாள்.

mithunam

மிதுனம்:-மிதுன ராசிக்காரர்களுக்கு குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். சகோதர வகையில் ஆரோக்யமான விவாதங்கள் வரக்கூடும். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. அமோகமான நாள்.

kadakam

கடகம்:- கடக ராசிக்காரர்களுக்கு குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். புது வேலை கிடைக்கும். திடீரென்று அறிமுகமாகுபவரால் பயனடைவீர்கள். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். இனிமையான நாள்.

சிம்மம்:-சிம்ம ராசிக்காரர்களுக்கு உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றிக் கொள்வீர்கள். சகோதரர்களால் பயனடைவீர்கள். நம்பிக்கைக்குரியவர்களை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள்  எடுப்பீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். புகழ் கௌரவம் உயரும் நாள்.

கன்னி: -கன்னி ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உடல் நலம் சீராகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதுமுதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

thulam

துலாம்:- துலா ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பழைய பிரச்சினைகளை நினைத்து பார்த்து கோபப்பட்டு கொண்டிருக்காதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டி கொடுத்து வேலை வாங்குவது நல்லது. உத்தியோகத்தில் சக ஊழியர்களை கடிந்து கொள்ளாதீர்கள். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

scorpio 08 2
scorpio 08 2

விருச்சிகம்:-விருச்சிக ராசிக்காரர்களுக்கு பிள்ளைகளை புதியபாதையில் வழி நடத்துவீர்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். புது வேலை கிடைக்கும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வாகனத்தை சரிசெய்வீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் சில
சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள்.உத்தியோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். நன்மை கிட்டும் நாள்.

thanu

தனுசு:-தனு ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் உள்ளவர்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வெளிவட்டாரத்தில் புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

magaram

மகரம்:-மகர ராசிக்காரர்களுக்கு புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்கு கிடைக்கும். உத்தியோகத்தில் சகஊழியர்கள் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். புதுமை படைக்கும் நாள்.

kumpam

கும்பம்:-கும்ப ராசிக்காரர்களுக்கு பால்ய நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும்.பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

meenam

மீனம்:-மீன ராசிக்காரர்களுக்கு துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள்.உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.