இந்ந ராசிகளையுடைய கணவன் மனைவிக்குள் அன்னியோன்யம் அதிகரிக்கும்!

22 1
22 1
mesam

மேஷம்-:மேஷ ராசிக்காரரா்களுக்கு குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்று கொள்வார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். சொத்துப் பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும். பிரபலங்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.

risapam

ரிஷபம்: -ரிஷப ராசிக்காரரா்களுக்கு கணவன் மனைவிக்குள் அன்னியோன்யம் அதிகரிக்கும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்று கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். அதிரடியான மாற்றம் உண்டாகும் நாள்.

mithunam

மிதுனம்:-மிதுன ராசிக்காரரா்களுக்கு ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். பொறுமை தேவைப்படும் நாள்.

kadakam

கடகம்:-கடக ராசிக்காரரா்களுக்கு குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். சகோதர வகையில் அலைச்சல் உண்டு. சாலைகளை கவனமாக கடந்து செல்லுங்கள். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள்.  வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் பிரச்னைகள் வரக்கூடும். போராடி வெல்லும் நாள்.

சிம்மம்:- சிம்ம ராசிக்காரரா்களுக்கு குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். மனைவி வழியில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முன் வைத்த கோரிக்கையை நிறைவேற்றுவீர்கள். பெருந்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டிய நாள்.

கன்னி-:கன்னி ராசிக்காரரா்களுக்கு தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உறவினர்கள் நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் நம்பிக்கைைய பெறுவீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

thulam

துலாம்:-துலா ராசிக்காரரா்களுக்கு குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். தடைபட்ட வேலைகள் முடியும். சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். நவீன சாதனங்களை வாங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும் . புத்துணர்ச்சி பெருகும் நாள்.

scorpio 08 2
scorpio 08 2

விருச்சிகம்:-விருச்சிக ராசிக்காரரா்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சின்ன சின்ன அவமானங்கள் மனத்தாங்கல் வந்து போகும். கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். அதிக உரிமை எடுத்து கொண்டு யாரிடமும் பேசவும் பழகவும் வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் கடிந்து கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.

thanu

தனுசு:-தனுசு ராசிக்காரரா்களுக்கு பிள்ளைகள் குடும்ப சூழ்நிலையை புரிந்து கொண்டு பொறுப்பாக நடந்துகொள்வார்கள். தாய்வழி உறவினர்களால் ஒத்தாசையாக இருப்பார்கள். புதியவர் நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். கனவு நனவாகும் நாள்.

magaram

மகரம்:-மகர ராசிக்காரரா்களுக்கு மற்றவர்களை நம்பி இருக்காமல் தன் முயற்சியால் என்ன முடிகிறதோ அதை செய்து முன்னேற வேண்டுமென்ற முடிவுக்கு வருவீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரம் தழைக்கும். உத்தியோகத்தில் சில புதுமைகளை செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

kumpam

கும்பம்: -கும்ப ராசிக்காரரா்களுக்கு குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அக்கம் – பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். நல்லன நடக்கும் நாள்.

meenam

மீனம்:-மீன ராசிக்காரரா்களுக்கு நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் வெளியூர் பயணங்கள் செய்யும்போது அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்தியோகத்தில் நிம்மதி உண்டு. தேவைகள் பூர்த்தியாகும் நாள்