இன்று அலைச்சல் அதிகரிக்கும் ராசிக்காரர் நீங்களா?

maxresdefault 1
maxresdefault 1
mesam
mesam

மேஷம்:-மேஷ ராசிக்காரர்களுக்கு தேவைக்கேற்ப பண வரவு உண்டு. பேச்சை குறைத்து செயலில் வேகம் காட்டுவீர்கள். பழைய உறவினர் நண்பர்கள் வீடு தேடி வருவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் கமிஷன்ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்தும் தருவார்கள். தொட்டது துலங்கும் நாள்.

risapam

ரிஷபம்:-ரிஷப ராசிக்காரர்களுக்கு குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சி மேற்கொள்வீர்கள். அக்கம் -பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை அதிகரிக்கும். நீண்டநாள் பிரார்த்தனையை குடும்பத்துடன் சென்று நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில்  சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். கனவு நனவாகும் நாள்.

mithunam

மிதுனம்:- மிதுன ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். பழைய கடனை தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும். உழைப்பால் உயரும் நாள். 

kadakam

கடகம்: – கடக ராசிக்காரர்களுக்கு குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். விருந்தினர்கள் வருகையால் வீடு களை கட்டும்.சொத்து வாங்குவது விற்பது சாதகமாக முடியும். வியாபாரத்தில் புதிய உத்திகளால் பழைய சரக்குகளை விற்றுதீர்ப்பீர்கள். உத்தியோகத்தில்  தலைமைக்கு நெருக்கமாவீர்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.

சிம்மம்: -சிம்ம ராசிக்காரர்களுக்கு கணவன் – -மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். தோற்றப்பொலிவு கூடும். நவீனமின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

கன்னி: -கன்னி ராசிக்காரர்களுக்கு ராசிக்குள் சந்திரன் இருப்பதால் இன்றைய நாள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். அடுத்தவர்களை குறைக் கூறுவதைநிறுத்துங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் சச்சரவு வரும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

thulam

துலாம்: -துலா ராசிக்காரர்களுக்கு எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் கனிவாகப் பேசி பாக்கியை வசூலிக்கபாருங்கள். உத்தியோகத்தில்  சக ஊழியர்களிடம் கவனமாகப் பழகுங்கள். எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள்.

scorpio 08 1
scorpio 08 1

விருச்சிகம்:-விருச்சிக ராசிக்காரர்களுக்கு சொன்ன சொல்லை காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். பெற்றோர் பக்கபலமாக இருப்பார்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அலுவலகத்தில் மரியாதை கூடும். சிறப்பான நாள்.

thanu

தனுசு: -தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் உண்டு. உறவினர் நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள்வார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரம் செழிக்கும். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.

magaram

மகரம்:-மகர ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் அமைதி நிலவும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். உறவினர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய திட்டங்கள் நிறைவேறும் நாள்.

kumpam

கும்பம்:- கும்ப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மனதில் இனம்புரியாத பயம் வந்து போகும். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். சிலரின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்தியோகத்தில்  அதிகாரிகளிடம் அளவாகப் பழகுங்கள். சூழ்நிலை உணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.

meenam

மீனம்-:மீன ராசிக்காரர்களுக்கு உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். தாய்வழி உறவினர்களின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்று கொள்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி வியப்பார். மகிழ்ச்சியான நாள்.