கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா?

pic
pic

மேஷம்

பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்று கொள்வார்கள். மனைவி வழியில் மதிப்பு கூடும். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

ரிஷபம்

குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்து கொள்வார்கள். அமோகமான நாள்.

மிதுனம்

வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிந்து செயல்படுவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்க தொடங்குவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். கனவு நனவாகும் நாள்.

கடகம்

எதிர்ப்புகள் அடங்கும். தாய்வழி உறவினர்களால் வீண் டென்ஷன் வந்து செல்லும். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

சிம்மம்

திடமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பேச்சில் முதிர்ச்சி தெரியும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். தைரியம் கூடும் நாள்.

கன்னி

குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். சகோதர வகையில் இருந்த மனவருத்தம் நீங்கும். சில வேலைகளை விட்டு கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.

துலாம்

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் நீங்கள் சிலருக்கு நல்லது சொல்லப் போய் பொல்லாப்பாக முடியும். வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா எனப் பார்த்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் பனிப்போர் வந்து நீங்கும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

விருச்சிகம்

குடும்பத்தில் மனம் விட்டுப் பேசுவது நல்லது. யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிக்க வேண்டி வரும். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.

தனுசு

குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பயணங்களால் ஆதாயம் உண்டு. நம்பிக்கைக்குரியவர் கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். மகிழ்ச்சி ஏற்படும் நாள்.

மகரம்

எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில்உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

கும்பம்

கணவன் – மனைவிக்குள் நிம்மதி பிறக்கும். பழைய பிரச்னைகளை பேசித் தீர்ப்பீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள் எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். உற்சாகமான நாள்.

மீனம்

சந்திராஷ்டமம் தொடர்வதால் சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாதீர்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். பொறுமை தேவைப்படும் நாள்.