இன்று சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிக்கப்பபோகும் ராசிக்காரர் நீங்களா?

Rasi palan new 3 324x160 1
Rasi palan new 3 324x160 1
mesam

மேஷம்:-மேஷ ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சிக்கலான சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை குறைகளை எடுத்து சொன்னால் கோபப்படாதீர்கள். உத்தியோகத்தில்  சக ஊழியர்களால் பிரச்சினைகள் வந்து விலகும். சிக்கனம் தேவைப்படும் நாள்.

risapam

ரிஷபம்:- ரிஷப ராசிக்காரர்களுக்கு சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவரச் சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

mithunam

மிதுனம்:- மிதுன ராசிக்காரர்களுக்கு அனுபவப் பூர்வமாகவும் அறிவுப் பூர்வமாகவும் பேசி எல்லோரையும் கவர்வீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர் நண்பர்களை சந்திப்பீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். அமோகமான நாள்.

kadakam

கடகம்:-கடக ராசிக்காரர்களுக்கு ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள்

சிம்மம்:- சிம்ம ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாயாருக்கு அசதி சோர்வு வந்து நீங்கும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். உழைப்பால் உயரும் நாள்.

கன்னி:-கன்னி ராசிக்காரர்களுக்கு குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சினைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு கிடைக்கும். வெற்றிக்கு வித்திடும் நாள்.

thulam

துலாம் -துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீண்ட நாள் கனவு நிறைவேறுவதற்கான வாய்ப்பு உண்டு. தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடி வரும். புதிய தொழில் துவங்குபவர்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்ட மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

scorpio 08 2
scorpio 08 2

விருச்சிகம்- விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு மந்த நிலை மாற புதிய உத்திகளை கையாள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் முன்னேற்றத்திற்கான பாதையை வடிவமைத்துத் தரும்.

thanu

தனுசு- தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீண்ட நாள் நண்பர்களுடன் பேசும் வாய்ப்பு உருவாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் தங்களுக்கு கீழ் பணிபுரியும் பணியாளர்களின் ஆதரவை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கவிடாமல் இடைஞ்சல்கள் ஏற்படும்.

magaram

மகரம் -மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பண வரவு உண்டாகும் சிறப்பான பலன்கள் ஏற்படுகிறது. பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கங்களை திறம்பட சமாளித்து விடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பொறுமையை கையாளுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் மன அமைதி பெற பேச்சை குறைத்துக் கொள்வது நல்லது.

kumpam

கும்பம்- கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன்களைக் கொடுக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றி அடையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் தொந்தரவு வலுவாக வாய்ப்புகள் உண்டு.

meenam

மீனம்- மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மன உளைச்சல் நீங்கி அமைதி உண்டாகும். சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் ஈடுபட்ட உள்ளவர்களுக்கு காலதாமதமான பலன்கள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய உத்திகளை கையாள்வதன் மூலம் முன்னேற்றம் காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு ஊதிய உயர்வு சாதகப் பலன்கள் உண்டாகும்.