இன்று அதிர்ஷ்ட யோகம் உள்ள ராசிக்காரர் நீங்களா?

7
7
mesam
mesam

மேஷ -மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. உங்களுக்கு வர இருக்கும் ஆபத்துகள் முன்கூட்டியே உங்களுக்கு தெரிய வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கைநழுவிப் போகும் என்பதால் கவனம் தேவை.

risapam

ரிஷபம்- ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் நிதானம் தேவை. உங்கள் உடன் இருப்பவர்களே உங்களை புரிந்து கொள்ளாமல் துன்புறுத்துவார்கள். சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு திடீர் அதிர்ஷ்ட யோகம் உண்டாகும். உத்தியோகத்தில் மன அமைதி நிறைந்து இருக்கும்.

mithunam

மிதுனம் -மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய முதலீடுகள் செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவதற்கு போராட வேண்டியிருக்கும். பெண்கள் சுய மரியாதையை எதிர்பார்த்து இருப்பார்கள்.

kadakam

கடகம்- கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கவலைகள் எல்லாம் நீங்க கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. காலம் தாழ்த்தி சொல்லப்படும் சில விஷயங்கள் மூலம் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன அமைதிக்கான வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்பட்டாலும் பொருட் தேக்கம் ஏற்படாது.

சிம்மம்- சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்ததை சாதித்து காட்ட கூடிய யோகம் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த பிரச்சனைகள் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது.

கன்னி -கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் மன நிறைவுடன் செய்யும் பொழுது அதில் பலன்களும் அதிகம் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் இடத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.

thulam

துலாம்- துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் திடீர் அதிர்ஷ்ட யோகம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. பண வரவு சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்துவிடுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய முதலீடுகள் மூலம் அதிக லாபத்தை காணக் கூடிய வாய்ப்புகள் உண்டாகும். ஆரோக்கியத்தில் சிறந்த முன்னேற்றத்தை காண்பீர்கள்.

scorpio 08 1
scorpio 08 1

விருச்சிகம்- விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதில் நினைத்த காரியங்கள் தடை இல்லாமல் நிறைவேறும் யோகம் உண்டு. மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சுப செய்திகள் கிடைக்கப் பெறுவார்கள். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் ஒரு சிலருக்கு அமையப் பெறும். வாகன ரீதியான பயணங்களின் மூலம் புதிய நட்பு வட்டம் விரியும்.

thanu

தனுசு- தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மற்றவர்களிடம் இருக்கும் குறை காணும் எதிர்மறை எண்ணங்கள் நீங்கும். நல்லவர்கள் யார் ? கெட்டவர்கள் யார் ? என்பதை தெரிந்து கொள்ளக் கூடிய வாய்ப்புகள் உண்டாகும். வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயரக் கூடிய சந்தர்ப்பங்கள் அமையும்.

magaram

மகரம்- மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். நீங்கள் எடுத்து வந்த விடாமுயற்சிக்கு உரிய பலன்களை காணலாம். சுய தொழிலில் இருப்பவர்களுக்கு அதிக லாபம் காணலாம். வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு விருத்தி ஏற்படும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் எச்சரிக்கை தேவை.

kumpam

கும்பம் -கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்தது நடக்கும். ஒரு சில விஷயங்கள் எதிர்பார்த்த வற்றிற்கும் மேலாக நடைபெற இருப்பதால் ஆச்சரியப்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்.

meenam

மீனம்- மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களும், உத்தியோக ரீதியான பயணங்களில் கவனம் செலுத்துவது நல்லது. கணவன் மனைவி இடையே தேவையற்ற வாக்குவாதங்கள் தவிர்ப்பதன் மூலம் மன அமைதி காணலாம். ஆரோக்கியத்தில் வீண் விரயங்கள் ஏற்பட இருப்பதால் கவனம் தேவை.