இன்று எதிர்பாராத திடீர் திருப்பங்கள் ஏற்படும் ராசிக்காரர் நீங்களா?

mesam

மேஷம் -மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்க்கும் வகையில் நல்ல மாற்றங்கள் நிகழும். தொழில் ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோக ரீதியான விஷயங்களில் மூன்றாம் மனிதர்களை நம்பாமல் உங்களை நீங்களே நம்புவது நல்லது.

risapam

ரிஷபம்- ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத திடீர் திருப்பங்கள் உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கும். உத்தியோக ரீதியான முன்னேற்றம் ஏற்றம் தரும் வகையில் அமையும். பெண்களுக்கு சுய தொழிலில் ஈடுபடும் யோகம் உண்டு. கூட்டுத் தொழில் புரிபவர்களுக்கு ஏற்றம் தரும் நாளாக அமையும்.

mithunam

மிதுனம்- மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவி இடையே இருக்கும் பிரச்சினைகள் மேலும் கூட கூடிய வாய்ப்புகள் இருப்பதால் கவனத்துடன் இருப்பது நல்லது. உத்தியோக ரீதியான முன்னேற்றம் காண புதிய விஷயங்களை கற்றுக் கொள்வது நல்லது. சுயதொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் உண்டு.

kadakam

கடகம்- கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் ஒரு முறைக்கு பலமுறை ஆலோசனை செய்து கொள்வது நல்லது. கணவன் மனைவி பிரச்சனைக்கு முடிவு கிடைக்கும். சுயதொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு புதிய உத்திகளை கையாள்வதன் மூலம் முன்னேற்றம் காணமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயர்வதற்கு வாய்ப்புகள் உள்ளன.

சிம்மம் -சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் வெற்றி உண்டாக கூடிய அற்புதமான அமைப்பு என்பதால் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணவரவு சிறப்பாக அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக பணியாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அமைதியான சூழ்நிலையில் இருக்கலாம்.

கன்னி கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் திடீர் பணவரவு உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் அமையும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். சுய தொழிலில் மந்த நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டு பெறுவதற்கான யோகம் உண்டு.

thulam

துலாம் -துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியமாகும். உத்யோக ரீதியான பயணங்களில் எச்சரிக்கை தேவை. கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்க விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பங்குதாரர்கள் மூலம் லாபம் காணக்கூடிய யோகமுண்டு.

scorpio 08 1
scorpio 08 1

விருச்சிகம்- விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஆரோக்கிய ரீதியான பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். உங்களை நீங்களே நிரூபித்துக் கொள்ள கூடிய சந்தர்ப்பங்கள் அமையும்.

thanu

தனுசு -தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பூர்வீக சொத்துக்கள் மூலம் ஒரு சிலருக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் வெற்றி உண்டாக கூடிய வாய்ப்புகளும் உண்டு. உத்யோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெற போராட்டம் காண்பீர்கள். சுயதொழிலில் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.

magaram

மகரம்- மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்க்கும் வகையில் பொருளாதாரத்தில் ஏற்றம் இருக்கும். வீட்டு தேவைகளுக்கு எளிதாக பூர்த்தி செய்து விடுவீர்கள். கணவன் மனைவி இடையேயான உறவு சிக்கல் குறையும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நண்பர்களின் ஆதரவு மகிழ்ச்சியை தரும். சுயதொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு திடீர் விரயங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

kumpam

கும்பம்- கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையில்லாத அலைச்சல் மற்றும் டென்சன் காணப்படும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சுப செய்திகள் கிடைக்கப் பெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயர்வதற்கு புதிய யுக்திகளை கையாளுவீர்கள். சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் அமையும்.

meenam

மீனம்- மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் யோகம் தரும் அமைப்பாக இருப்பதால் தொட்டதெல்லாம் துலங்க கூடும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் எச்சரிக்கை தேவை. வீட்டில் இருக்கும் பெரியவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் மனஅமைதி பெறலாம். சுய தொழிலில் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கிடைப்பது இடையூறுகள் ஏற்படும்.