இன்றைய நாளில் திடீர் மாற்றங்கள் உங்களுக்குள் உருவாகும் ராசிக்காரர் நீங்களா?

eee
eee
mesam

மேஷம் -மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்த வற்றிற்கு மாறாக நடக்க கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குழப்பமான மனநிலை நீடிக்கும். சுய தொழிலில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காவிட்டாலும் பிரச்சனைகள் ஒன்றும் இருக்காது. குடும்பத்தில் அமைதி நிலவும்.

risapam

ரிஷபம்- ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் தொட்டது துலங்கும் கூடிய வாய்ப்புகள் உண்டு. ஒருசிலருக்கு திடீர் அதிர்ஷ்ட யோகம் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் கைகூடி வரும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை நீடிக்கும்.

mithunam

மிதுனம்- மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாளில் திடீர் மாற்றங்கள் உங்களுக்குள் உருவாகும். உங்களை சுற்றி இருப்பவர்களை அடையாளம் கண்டு கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய தொழில் விஷயங்களைப் பற்றிய நுட்பங்களை கற்றுக் கொள்வதற்கு வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

kadakam

கடகம்- கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்ப்பதை விட சிறப்பான அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். வங்கி சேமிப்பு வரக்கூடிய வாய்ப்புகள் உண்டு. புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் முன்யோசனை இல்லாமல் செயல்பட வரை தவிர்ப்பது உத்தமம். சுயதொழிலில் எதிர்பார்க்கும் லாபம் உண்டு.

சிம்மம்- சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணரீதியான விஷயத்தில் எச்சரிக்கையாக இருந்து கொள்வது நல்லது. சுயதொழில் புரிபவர்கள் மூன்றாம் நபர்களிடமிருந்து கொடுக்கல் வாங்கல் தொடர்பான பிரச்சனைகளை தவிர்ப்பது நல்லது.

கன்னி -கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பணம் பல வழிகளிலும் வரும். தூரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைக்க பெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு தங்களுக்கு கீழ் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பும் முழுமையாக கிடைக்கும். கணவன்-மனைவி இடையே அன்பு அதிகரிக்கும்.

thulam

துலாம் -துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்ததை சாதித்துக் காட்ட கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். கணவன் மனைவி இடையே இருக்கும் ஒற்றுமை பலப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்.

scorpio 08 2
scorpio 08 2

விருச்சிகம் -விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீண்ட நாள் பழைய விஷயங்களை பற்றிய தேவையில்லாத எண்ணங்களை அசைபோட கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனஅமைதி பெற தியானத்தில் ஈடுபடலாம். புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு சாதக பலன்கள் உண்டு.

thanu

தனுசு- தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதில் இருக்கும் கவலைகள் நீங்கி புத்துணர்வு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் திடீர் திருப்பங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கப்பெறும். பூர்வீக சொத்துக்கள் மூலம் ஒரு சிலருக்கு அனுகூலமான பலன்கள் உண்டு.

magaram

மகரம்- மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்துடன் செலவிடக் கூடிய அற்புதமான வாய்ப்பு அமையும். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கை தேவை. வேலை இல்லாதவர்களுக்கு மனதிற்கு பிடித்த நல்ல வேலை அமையும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை நீடிக்க விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.

kumpam

கும்பம்- கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் எதிர்கொள்ளும் தைரியம் பிறக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை மாறும். சுயதொழில் புரியும் பெண்களுக்கு ஏற்ற மான சூழ்நிலை இருக்கும். கிடைக்கும் புதிய வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்வதன் மூலம் முன்னேற்றம் காணலாம்.

meenam

மீனம்- மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எந்த ஒரு காரியத்தையும் செய்யாமல் இருப்பது நலம் தரும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நிதானம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு அமோகமாக வெற்றி உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.