இன்றைய நாள் உங்களுக்கு எப்படி அமைந்துள்ளது!

13 1
13 1
mesam

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்த்த நிறைய விஷயங்கள் எதிர்பார்த்தபடியே நிறைவேறுவதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். தொழில் மற்றும் வியாபாரம் ரீதியான முன்னேற்றம் சிறப்பாகவே இருக்கும். கல்வியில் புதிய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை சுமை அதிகமாக இருக்கும்.

risapam

ரிஷபம் -ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான ஒரு நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளிடம் இருந்து பாராட்டுகளை பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் சரியாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

mithunam

மிதுனம் -மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவிக்கு இடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு சுமாரான பலன்கள் உண்டு. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றி தரும் வகையில் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமுகமான சூழ்நிலை நிலவும்.

kadakam

கடகம்- கடக ராசிகாரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத வகையில் திடீர் தனவரவு ஏற்பட வாய்ப்புகள் உண்டு. பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருப்பதால் வீட்டு தேவைகளை எளிதில் பூர்த்தி செய்து விடுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்க்கும் அளவிற்கு லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பயணங்களின் மூலம் அனுகூல பலன்கள் உண்டு.

சிம்மம்- சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் நிச்சயம் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு எதிராக திரும்பலாம். புதிய தொழில் . துவங்குபவர்களுக்கு ஏற்றம் தரும் அமைப்பாக உள்ளது. கணவன் மனைவியிடையே நெருக்கம் அதிகரிக்க ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது.

கன்னி -கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் யோகம் தரும் அமைப்பாக இருப்பதால் எதிலும் ஜெயம் உண்டாகும். காலத்தினால் செய்த உதவி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது என்ற வள்ளுவரின் கூற்றுக்கிணங்க சில விஷயங்கள் நடைபெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான லாபம் பெறுவீர்கள். ஆரோக்கிய விஷயங்களில் கவனம் தேவை.

thulam

துலாம்- துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கோபத்தைக் குறைத்துக் கொள்வதன் மூலம் மன அமைதி பெறலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். அரசு வழி காரியங்களில் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

scorpio 08 1
scorpio 08 1

விருச்சிகம்- விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் ஜெயம் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு அலைச்சல் இருந்தாலும் வெற்றி கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு தொழில்ரீதியான கொடுக்கல்-வாங்கல் பிரச்சனை குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை சாதகமான பலன்களை கொடுக்கும்.

thanu

தனுசு- தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான அமைப்பு என்பதால் எதிலும் வெற்றி காண்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய தொழில் நுட்பங்களை கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டு. புதிய நண்பர்கள் மூலம் முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படும்.

magaram

மகரம்- மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவியிடையே இருக்கும் நெருக்கம் அதிகரிக்க ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேசிக் கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். சமூகத்தின் மீதான உங்களது அக்கறை அதிகரிக்கும். பெண்கள் இறை வழிபாடுகளில் கவனம் செலுத்துவார்கள்.

kumpam

கும்பம்- கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வாங்கல் தொடர்பான விஷயங்கள் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. மூன்றாம் நபர்களை நம்பி எந்த ஒரு பொறுப்பையும் ஒப்படைக்க தேவையில்லை. சகோதர சகோதரிகளுக்கு என்ன பிரச்சனைகள் இப்படியாக நீங்கும். பொருளாதாரத்தில் இருக்கும் ஏற்ற இறக்கங்களை திறம்பட சமாளித்து விடுவீர்கள்.

meenam

மீனம்- மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வாகன ரீதியான பயணங்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். புதிய நண்பர்களின் சேர்க்கை வெற்றிக்கான பாதையை அமைத்து தரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு மந்த நிலை காணப்பட்டாலும் பொருள் தேக்கம் ஏற்படாது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் பாராட்டும் படியான சூழ்நிலை நிலவும். உங்களுடைய திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும்.