இன்று சுப காரியங்கள் கை கூடி வரும் ராசிக்காரர் நீங்களா?

Rasi palan new 12 324x160 1
Rasi palan new 12 324x160 1
mesam
mesam

மேஷம்- மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்க்கும் சில விஷயங்கள் காலதாமதம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. சாதகமற்ற அமைப்பு என்பதால் உத்தியோகத்தில் இருப்பவர்கள் வாகன ரீதியான பயணங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். கணவன் மனைவி உறவு சிக்கல் நீங்கும்.

risapam

ரிஷபம் -ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் யோகம் தரும் அமைப்பு என்பதால் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் பலிதமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களுடைய பலவீனத்தை அறிந்து செயல்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருக்கும் மந்த நிலை மாறி முன்னேற்றமான சூழ்நிலை இருக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் குறையும்.

mithunam

மிதுனம் -மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்ப்போம் சுப காரியங்கள் கை கூடி வரும் யோகமுண்டு. வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான விஷயங்களில் கவனமுடனிருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களை சுற்றி இருப்பவர்களின் குணாதிசயங்களை தெரிந்துகொள்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.

kadakam

கடகம் -கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் நிதானம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்துவிடக்கூடாது. ஒருமுறைக்கு பலமுறை ஆலோசித்துவிட்டு செய்வது நல்லது. சுயதொழிலில் எதிர்பார்க்கும் லாபம் கிடைப்பதால் பிரச்சினைகள் இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் இருப்பது நல்லது.

சிம்மம் -சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான அமைப்பு என்பதால் எதிலும் வெற்றி உண்டாகும். திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் வீண் அலைச்சல் ஏற்பட்டாலும் சாதகங்கள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையில்லாத தொந்தரவுகள் நீங்கும். வேலைப்பளு குறைந்து மன அமைதியுடன் காணப்படுவீர்கள். சுய தொழிலில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

கன்னி -கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவியிடையே இருக்கும் நெருக்கம் மேலும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு. ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு குடும்பத்துடன் செலவிடக் கூடிய வாய்ப்பு உண்டு. சுய தொழிலில் இருப்பவர்களுக்கு பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும்.

thulam

துலாம்- துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்ப்பும் யோகம் அமையும். நீங்கள் எடுக்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தாங்கள் எடுக்கும் விழா முயற்சிக்கான பலனும் கிடைக்கும். சுய தொழிலில் இருப்பவர்களுக்கு புதிய முயற்சிகளின் மூலம் அனுகூலமான பலன்களை பெறலாம். குடும்பத்தில் அமைதி நிலவ விட்டு கொடுத்து செல்வது நல்லது.

scorpio 08 2
scorpio 08 2

விருச்சிகம்- விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் ஜெயம் உண்டாக கூடிய அமைப்பாக இருப்பதால் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன அமைதி கிடைக்க அனுசரணையான பேச்சு அவசியமாகும். உங்களுடைய முரட்டு சுபாவத்தால் சிலருடைய மனதிலிருந்து நன்மதிப்பை இழப்பீர்கள். கணவன்-மனைவி இடையே அன்பு மேம்படும் வாய்ப்புகள் உண்டு.

thanu

தனுசு- தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் இருப்பவர்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். திடீர் பணவரவு மகிழ்ச்சியை அதிகரிக்கச் செய்யும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வங்கி கணக்கு குறையாமலிருக்க ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நல்லது. சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கதவைத் தட்டும்.

magaram

மகரம்- மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் பொறுமையை கையாள்வது நல்லது. உங்களுடைய முன்கோபத்தால் தேவையில்லாத மன சங்கடங்களை உருவாக்கி கொள்வீர்கள். மூன்றாம் நபர்களை நம்பி எந்த ஒரு முடிவையும் எடுக்காமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடன் சுமை குறையும் வாய்ப்புகள் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.

kumpam

கும்பம்- கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாளில் எதிலும் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் யாருக்கும் முன் ஜாமீன் போடுவது கவனத்துடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் வீண் பழியை சுமப்பதற்கான வாய்ப்புகள் அமையும் என்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. சகோதர சகோதரிகளுக்கு இடையேயான ஒற்றுமை குறையும்.

meenam

மீனம்- மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அதிர்ஷ்டமான நாளாக மாற ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் விரயங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. சுபகாரிய முயற்சிகளில் தேவையில்லாத அலைச்சல் மற்றும் டென்ஷன் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் அமோகமாக வெற்றி கிடைக்கும். தொழில் நுணுக்கங்களை கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும்.