இன்றைய நாள்(16.03.2021) உங்களுக்கு எப்படி?

Today 6 1
Today 6 1

மேஷம்

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். நெருங்கியவர்களிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை பகைத்து கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

ரிஷபம்

பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். அண்டை அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம் எரிச்சல் அடைவீர்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

மிதுனம்

உங்கள் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் முக்கிய பொறுப்புகளை ஏற்பீர்கள். முன்னேற்றம் பெறும் நாள்.

கடகம்

உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக்கொள்வீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். விஐபிகளால் ஆதாயம் அடைவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப்போன வாய்ப்புகள் தேடி வரும். அலுவலகத்தில் மரியாதை கூடும். புதிய பாதை தெரியும் நாள்.

சிம்மம்

கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி சுறுசுறுப்பாவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.

கன்னி

சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் ஏற்படும். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்தப் பாருங்கள்.எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள்.

துலாம்

உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

விருச்சிகம்

கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். உங்களிடம் பழகும் நண்பர்கள் உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். தொட்டது துலங்கும் நாள்.

தனுசு

புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

மகரம்

எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வெளிவட்டாரதொடர்புகள் விரிவடையும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். நன்மை கிட்டும் நாள்.

கும்பம்

குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். பயணங்கள் சிறப்பாக அமையும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் கை ஓங்கும். வெற்றி பெறும் நாள்.

மீனம்

கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். கைமாற்றாக வாங்கி இருந்த பணத்தை திருப்பி தருவீர்கள். தள்ளிப்போன விசேஷங்கள் உடனே முடியும்.உறவினர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள். விஐபிகளால் ஆதாயம் அடைவீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.