இன்றைய நாள் சுபகாரிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும் ராசிக்காரர் நீங்களா?

22 1
22 1
mesam

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்க்கும் பணவரவு உங்களுக்கு சரளமாக புழங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்குபொருளாதார ரீதியான ஏற்ற இறக்கங்களை சமாளிக்க வேண்டி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்கும். ஈசனை வழிபட நல்லது நடக்கும்.

risapam

ரிஷபம்- ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவி இடையே இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு நல்ல ஒரு முன்னேற்றம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனதில் சிறு குழப்பங்கள் தோன்றி மறையும். எம்பெருமான் முருகனை வழிபடுங்கள் நன்மை பிறக்கும்.

mithunam

மிதுனம் -மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு பணம் கிடைப்பதில் கால தாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதில் இருக்கும் இடையூறுகள் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் காண புதிய உத்திகளை கையாள்வது நல்லது.

kadakam

கடகம்- கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் பல்வேறு விதமான இடையூறுகளை சந்தித்தாலும் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொருள் சேர்க்கை ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு திடீர் பணவரவு ஏற்பட வாய்ப்புகள் உண்டு. பகவத் கீதை வாசிப்பது நல்லது.

சிம்மம்- சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு நல்ல பலன் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு மனதில் உண்டான குழப்பங்கள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.

கன்னி- கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் ஒன்று நினைக்க அது ஒன்று நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவை இல்லாத மன சஞ்சலம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. சுயதொழில் புரிபவர்கள் கவனத்துடன் பணியாற்றுவது நன்மை தரும். பெண்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும்.

thulam

துலாம் -துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்க்கும் எல்லா விஷயங்களும் ஜெயமாகும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு திருமண ரீதியான முயற்சிகள் கைகூடி வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு தேவையில்லாத வீண் விரயங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு என்பதால் எச்சரிக்கை தேவை. ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

scorpio 08 6
scorpio 08 6

விருச்சிகம்- விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீண்ட நாள் கனவுகள் அல்லது ஆசைகள் நிறைவேறும் வாய்ப்புகள் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு சுயமாக சிந்திக்க கூடிய ஆற்றல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தேவை இல்லாத நபர்களிடம் இருந்து சற்று தள்ளி இருப்பது நல்லது. இறை வழிபாடுகளில் ஆர்வம் செலுத்துவது மன அமைதியை தரும்.

thanu

தனுசு- தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுபகாரிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும். உத்யோகத்தில் இருப்பவர்கள் வாகன ரீதியான பயணங்களை தவிர்ப்பது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த மந்தநிலை நீங்கும். மணிகளின் எண்ணிக்கை உயர்வதற்கு வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியம் சீராக இருக்கும்.

magaram

மகரம்- மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் ஒருமுறைக்கு இரண்டு முறை ஆலோசனை செய்து விட்டு முடிவு எடுப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் குறித்த விஷயங்களில் சாதகப் பலன்கள் உண்டாகும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளவர்கள் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. சில ஏமாற்றங்களை சந்திக்க நேரலாம்.

kumpam

கும்பம் -கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதில் தீராத கவலைகள் தீர்ந்து விடுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பொறுப்புணர்வை வளர்த்துக் கொள்வது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். பெண்களுக்கு ஆரோக்கிய ரீதியான சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

meenam

மீனம் -மீனம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பூர்விக சொத்துக்கள் மூலம் ஒரு சிலருக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். மேலும் புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் நற்பலன் கிடைக்கும். புதிதாக தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு சாதகப் பலன் உண்டு. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். சுய தொழிலில் லாபம் உண்டு.