இன்று சுபகாரியங்கள் கைகூடி வரும் ராசிக்காரர் நீங்களா?

Rasi palan new 26 324x160 1
Rasi palan new 26 324x160 1
mesam

மேஷம் -மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்க கூடிய வாய்ப்புகள் அதிகம் உண்டு. உத்தியோகத்தில் உங்களுக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் முன்னேற்றத்தை குறிக்கும் வகையில் அமையும். பெண்கள் கவனத்துடன் இருப்பது நல்லது.

risapam

ரிஷபம் -ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதில் இருக்கும் கவலைகள் நீங்க கூடிய வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் உங்களைப் புரிந்து கொள்ளாதவர்கள் புரிந்து கொள்வார்கள். உத்யோகத்தில் கொடுக்கப்பட்ட வேலைகளை சரியாக செய்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பெண்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.

mithunam

மிதுனம் -மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய அன்பை புரிந்து கொள்ளாமல் சிலர் உதாசீனப் படுத்துவார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் தேவையில்லாத பிரச்சனைகளை சந்திக்காமல் இருக்க கூடுமான வரை பொறுமை காப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர் பாராத லாபம் உண்டு. பெண்கள் தைரியத்துடன் செயல்படுவீர்கள்.

kadakam

கடகம்- கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடு நீங்கும். அமைதியான நிலையில் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அன்றாட வேலையில் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் முடிவுகளை எடுக்கும் முன் ஆலோசனை செய்து கொள்வது நல்லது. பெண்களுக்கு ஆரோக்கியம் சீராக இருக்க உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்வது நல்லது.

சிம்மம்- சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய விடாமுயற்சிக்கு விஸ்வரூப வெற்றி கிடைக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மனநிறைவு இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் சிலர் தடைக்கற்களாக இருப்பார்கள். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பெண்கள் இறை வழிபாட்டில் ஆர்வம் செலுத்துவீர்கள்.

கன்னி -கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையாவது தேவை இல்லாமல் சிந்தித்துக் கொண்டே இருப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரித்து காணப்படுவதால் டென்ஷன் இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக அமையும். பெண்கள் எடுக்கும் முயற்சியில் சாதகப் பலன் கிடைக்கும்.

thulam

துலாம் -துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் யோகம் தரும் அமைப்பு என்பதால் சுபகாரியங்கள் கைகூடி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையில்லாத அலைச்சல் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு சில தொழில் நுணுக்கங்களை கற்றுக் கொள்வதற்கு சந்தர்ப்பங்கள் அமையும். பெண்களுக்கு குழப்பத்திலிருந்து தெளிவு கிடைக்கும்.

scorpio 08
scorpio 08

விருச்சிகம்- விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் அமோக வெற்றி கிடைக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் நீங்கள் தொட்டதெல்லாம் துலங்க கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த மந்தநிலை மாறும். சக பணியாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஏற்றம் தரும் அமைப்பு உண்டாகும். பெண்கள் மன அமைதியுடன் இருப்பீர்கள்.

thanu

தனுசு- தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கூடுமானவரை பொருளாதாரத்தில் பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு தாய் வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் காண சற்று சிந்தித்து செயல்படுவது உத்தமம். பெண்களுக்கு மனோதிடம் அதிகரிக்கும்.

magaram

மகரம்- மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் வெற்றி வாகை சூட கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தொலை தூரத்திலிருந்து சுபச் செய்திகள் கிடைக்கப் பெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு ஆரோக்கிய ரீதியான பிரச்சினைகளை எதிர் கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். பெண்களுக்கு உணவு கட்டுப்பாட்டில் கவனம் தேவை.

kumpam

கும்பம்- கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் செயல்பட நினைக்கும் சில விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சாதகமற்ற அமைப்பு என்பதால் கவன சிதறல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் வலுவாகும். பெண்களுக்கு திடீர் தனவரவு உண்டாகும்.

meenam

மீனம்- மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த வெற்றி கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக பணியாளர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. உடனிருப்பவர்களே நம்பிக்கை துரோகம் செய்யும் வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த மந்தமான நிலை மாறி முன்னேற்றம் உண்டாகும். பெண்களுக்கு ஓய்வு தேவை