இன்று கணவன்-மனைவி இடையே அன்பு அதிகரிக்கும் ராசிக்காரர் நீங்களா?

16
16
mesam

மேஷம் -மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை நிலவும். உறவினர்களின் வருகை மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நிலுவையில் இருந்த வேலைகள் முடியும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் புத்துணர்ச்சியுடன் செயலாற்றக் கூடிய நாளாக அமையும்.

risapam

ரிஷபம்- ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அதிகரிப்பதால் உடல் சோர்வு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையில்லாத வீண் பழி ஏற்படும் என்பதால் எச்சரிக்கை தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெறுவதில் இடையூறுகள் ஏற்படும்.

mithunam

மிதுனம்– மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையில்லாத கவலைகள் மனதை அழுத்தும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வாகன ரீதியான வீண் விரயங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் கூட்டாளிகளுடன் ஆன பிரச்சனைகளை எளிதாக சமாளிப்பீர்கள்.

kadakam

கடகம்- கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் குடும்பத்தினரின் ஆதரவு அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிலுவையில் இருந்த கடன் தொகைகள் குறைவதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் உங்களின் கடமைகளை சரியாக செய்து முடிப்பீர்கள். வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பை பெறுவீர்கள்.

சிம்மம்- சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பழைய நினைவுகளை அசை போட்டுப் பார்க்க கூடிய நாளாக அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பணவரவு சீராக இருக்கும். திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய சலுகைகள் கிடைக்கும். கணவன்-மனைவி இடையே அன்பு அதிகரிக்கும்.

கன்னி -கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவிக்குள் இருக்கும் பிரச்சனைகளை நீங்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் வேண்டிய இடத்தில் இருந்து பணம் பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு உண்டு. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

thulam

துலாம்- துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இழந்ததை பெறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு தேவையில்லாத பிரச்சினைகளில் இருந்து தள்ளி இருப்பது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்கள் சக பணியாளர்களினால் சிறு சிறு பிரச்சனைகள் வந்து நீங்கும்.

scorpio 08 1
scorpio 08 1

விருச்சிகம் -விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவிக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை பேசி தீர்த்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய நபர்களின் அறிமுகம் பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் பயணங்களால் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். பணவரவு சீராக இருக்கும்.

thanu

தனுசு- தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொருளாதாரத்தில் இருக்க முயற்சி நிலை காரணமாக குடும்பத் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்து விடுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய உத்திகளைக் கையாள்வதற்கும் வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் உதவிகள் கிடைக்கும்.

magaram

மகரம்- மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தீட்டிய திட்டங்கள் யாவும் தடையில்லாமல் நிறைவேறும். உற்றார் உறவினர்களின் ஆதரவு பெருகும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது மூலம் ஏற்றம் காணலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் புதிய நுட்பங்களை கற்றுக் கொள்வீர்கள்.

kumpam

கும்பம்- கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தந்தைவழி உறவினர்கள் மூலம் ஆதாயம் காணலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருக்கும் சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்கள் உழைப்பிற்கு உரிய அங்கீகாரத்தை பெறுவதற்கு போராடுவீர்கள். விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி தரும்.

meenam

மீனம் -மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் முடிவுகளில் தீர்க்கமான பலன்களும் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மனரீதியான பயணங்களின் பொழுது கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்பட்டாலும் பொருள் தேக்கம் ஒன்றும் ஏற்படாது. ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.