இன்றையநாள் உங்களுக்கு எப்படி?

images 1 1
images 1 1

மேஷம்


அன்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாள் ஆகும். மாணவர்களின் கல்வித் திறன் பளிச்சிடும். வெளியூர்களில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். ஒரு சிலருக்கு வெளிநாட்டிற்கு செல்வதற்கான நல்ல செய்திகள் வந்து சேரும் நாளாகும். தன வரவு உண்டாகும்.

ஒரு சிலர் குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி இருப்பர் இவைகளில் நல்ல செய்திகள் கிடைக்க வாய்ப்பு உண்டு. தொழில் மாற்றத்தைப் பற்றி அல்லது இடமாற்றத்தை பற்றி சிந்திக்கும் நாளாக இன்றைய நாள் அமையும்.

ரிஷபம்

நண்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாகவே துவங்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளை ஓரிரு நாட்கள் தள்ளி வைப்பது வெற்றிக்கனியை பெறும் வழியை எளிதாக்கும். வயோதிகர்களுக்கு சற்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு விலகும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் தேவை.

அதிக நேரம் டிவி மொபைல் மற்றும் சோஷியல் மீடியாவில் நேரத்தை செலவழிப்பீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் அலைச்சலும் செலவுகளும் உண்டாகும். விநாயகப் பெருமான் வழிபாடு விக்கினம் தீர்க்கும். வெளிநாட்டு வேலை வாய்ப்பை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.

மிதுனம்


அன்பர்களுக்கு சிறந்த நாளாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும் தனவரவு உண்டு. சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு தன வரவு நன்றாக இருக்கும். புது தொழில் முயற்சிகள் தொடர்பான திட்டமிடுதல் மனதில் ஏற்படும்.

வேலை தேடுபவர்களுக்கு வெளியூரில் அல்லது வெளிநாட்டில் வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. சொத்து சம்பந்தப்பட்ட செயல்களும் சிந்தனைகளும் ஆதாயம் தருவதாக அமையும். எதிர்காலத்தை பற்றிய சிந்தனையின் சொத்துக்கள் வாங்குவது மற்றும் வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்களும் மனதில் இடம் புதிய பிரயாணங்களை பற்றி திட்டமிடுவீர்கள்.

கடகம்

நண்பர்களுக்கு இன்றைய நாள் சமமான நாளாக செல்லும். எடுக்கின்ற முயற்சிகள் வெற்றியடையும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டு. மாணவர்களுக்கு கல்வியில் கவனம் தேவை வணிகவியல் இயந்திரவியல் தொழில் போன்றவற்றில் உள்ளவர்களுக்கு சற்று கவனம் கூடுதலாக தேவை.

சிம்மம்

ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் கணவன் மனைவி ஒற்றுமை மேம்படும். சுபகாரியப் பேச்சுக்கள் வெற்றியடையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல நாள் வேலையில் முன்னேற்றம் காண்பார்கள்.

ரியல் எஸ்டேட் கட்டிட தொழில் வாகன தொழில் போன்றவற்றில் இருப்பவர்களுக்கு சற்று கூடுதலான வேலை வாங்கக் கூடிய நாள். இன்றைய நாள் உணவுத் தொழிலில் இருப்பவர்களுக்கும் கமிஷன் ஏஜென்சி போன்ற தொழிலில் இருப்பவர்களுக்கும் இன்று வருமானம் நன்றாக இருக்கும்.

கன்னி

நண்பர்களுக்கு இன்றைய நாள் சந்தோஷத்தைக் கொடுக்கக் கூடிய நாளாக அமையும். புதிய தொழில் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் செய்யும் தொழிலில் முன்னேற்றம் உண்டு. சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். சொத்து தொடர்பான சிந்தனைகளும் செயல்பாடுகளும் நன்மையில் முடியும்.

துலாம்

நண்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமையும். நாளின் முற்பகுதியில் அலைச்சல் அதிகமாக இருந்தாலும் வெற்றிகரமாக எதிர்கொண்டு நன்மை அடைவீர்கள். நண்பர்கள் மற்றும் சுற்றத்தார்கள் அனுகூலம் உண்டு.

வெளியூர் மற்றும் வெளிநாட்டு பிரயாணங்கள் தொடர்பான நல்ல செய்திகள் வந்து சேரும். வேலை தேடுபவர்களுக்கு நாளின் முற்பகுதியில் நல்ல பலன் கிட்டும். புது தொழில் முயற்சிகள் எடுப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். எதிர்பார்த்த பணம் வரும் போட்டி பந்தயம் லாபம் தருவதாக அமையும்.

விருச்சகம்
நாளின் பிற்பகுதியில் அலைச்சல் அதிகமாகும். பெண்கள் பேச்சில் கூடுதல் கவனம் தேவை. வயதானவர்களுக்கு கால் மற்றும் மூச்சு தொடர்பான தொல்லைகள் வந்து செல்ல வாய்ப்பு உண்டு. மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் தேவை. கல்வி தொடர்பான விஷயங்களுக்காக கூடுதல் அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

தொழில் ரீதியாக தாங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும். வெளியூர் மற்றும் வெளி நாட்டில் வேலை தொடர்பான செய்தியை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தில் சற்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.

தனுசு
நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக செல்லும். வியாபாரம் சேவைத் தொழில் பத்திரிகைத் தொழில் கலைத்துறை வாகன தொழில் அரசு நிர்வாகம் போன்றவற்றில் இருப்பவர்களுக்கு நல்லதொரு நாளாக இன்றைய நாள் அமையும்.

மருந்து மருத்துவம் ஷேர் மார்க்கெட் போன்றவற்றில் இருப்பவர்களுக்கு நாளின் பிற்பகுதி நன்றாக இருக்கும். பெண்களுக்கு நல்லதொரு நாளாகும் காதலில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சிகரமான நாளாக உள்ளது புது தொழில் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

மகரம்
அன்பர்களுக்கு நேயர்களுக்கு இன்றைய நாள் இனிமையான நாளாக இருக்கும். சுபச் செலவுகள் நாளின் பிற்பகுதியில் தேடிவரும். சுப காரியத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டு.

ஒருசிலருக்கு திடீர் பிரயாணங்கள் ஏற்படலாம் தாய் வழி சொந்தம் வந்தது சற்று வருத்தம் ஏற்பட வாய்ப்பு உண்டு. பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது மிக நல்லது மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் தேவை. மொழிப்பாடம் மற்றும் அறிவியல் போன்ற பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

கும்பம்
இன்றைய நாள் இனிய நாளாக அமையும். எதிர்பார்த்த பணவரவு உண்டு. மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் மாணவராக இருக்கும். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு ஆதாயம் கிடைக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் வெற்றிகரமாக முடியும்.

மாணவர்களின் கல்வி மேம்படும் உறவினர்கள் வருகை அல்லது நண்பர்களை சந்திப்பது போன்ற மனதுக்கு இனிய நிகழ்ச்சிகள் நடக்கும். ஆயில் அண்ட் கேஸ் வங்கித்துறை மருத்துவத்துறை ஆன்மீகம் போன்றவற்றில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு நல்ல நிகழ்வுகள் நடக்கும்.

மீனம்
நேயர்களுக்கு செய் தொழிலில் வெற்றி காண்பீர்கள். குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். பத்திரிக்கைத்துறை விஷுவல் மீடியா போன்றவற்றில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். ஒரு சிலருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உண்டு.

வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். அரசுத்துறை காரியங்களில் சற்று கால தாமதம் ஆகலாம். சொத்து விற்பது மற்றும் வாங்குவது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஆதாயம் கிடைக்கும். இடம் மாறுவது சொத்து வாங்குவது போன்ற சிந்தனைகளில் ஈடுபடுவீர்கள்.