இன்று சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறும் ராசிக்காரர் நீங்களா?

24
24

மேஷம் ராசிக்காரர்களுக்கு புதிய சிந்தனைகள் மனதில்தோன்றும். பிள்ளைகளின் உயர்கல்வி உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். நினைத்தது நிறைவேறும் நாள்.

  • ரிஷப ராசிக்காரர்களுக்கு பிரியமானவர்களுடன் சந்திப்பு நிகழும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.
  • மிதுன ராசிக்காரர்களுக்கு சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தைரியம் கூடும் நாள்.
  • கடக ராசிக்காரர்களுக்கு கணவன்- மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். அழகும் இளமையும் கூடும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப்போன வாய்ப்புகள் தேடிவரும். உத்தியோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். புதிய அத்தியாயம் தொடங்கும் நாள்.
  • சிம்ம ராசிக்காரர்களுக்கு  ராசிக்குள் சந்திரன் இருப்பதால் இனம் தெரியாத கவலைகள் வந்து போகும். நண்பர்கள் உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப்போவது நல்லது. இடம், பொருள், ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.
  • கன்னி ராசிக்காரர்களுக்கு குடும்பத்தினருடன் வீண்வாக்குவாதம் வந்துப் போகும். உடல்நலத்தில் கவனம் தேவை. பழைய கடன் பிரச்சினை அவ்வப்போது மனதை வாட்டும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்தியோகத்தில் மறைமுக தொந்தரவு வந்து தீரும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.
  • துலாம் ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். மதிப்புக் கூடும் நாள்.
  • விருச்சிக ராசிக்காரர்களுக்குஉங்கள் செயலில் வேகம் கூடும். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு. நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

  • தனுசு ராசிக்காரர்களுக்குகுடும்பத்தில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். எதிர்பாராத இடத்தில் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புதிய பாதை தெரியும் நாள்.
  • மகர ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். சின்னச் சின்ன அவமானங்கள் வரக்கூடும். வீட்டிலும் வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் பகைத்துக் கொள்ளாதீர்கள். போராட்டமான நாள்.
  • கும்ப ராசிக்காரர்களுக்கு எதையும்  தன்னம்பிக்கையுடன் செய்யத் தொடங்குவீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். கல்யாணப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். நன்மை நடக்கும் நாள்.
  • மீன ராசிக்காரர்களுக்குகுடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வெளியூரிலிருந்து நல்ல செய்திகள் வரும். வழக்கில் சாதகமான தீர்ப்புவரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் சவால்களையும் சாதாரணமாக முடிப்பீர்கள். தொட்டது துலங்கும் நாள்.