சந்திரனின் ஆதிக்கத்தால் விமர்சனங்களை எதிர்நோக்கும் ராசிக்காரர் நீங்களா?

27
27
mesam
mesam
  • மேஷ ராசிக்காரர்களுக்கு உங்களின் அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வாகனத்தை சரி செய்வீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில்அதிகாரிகளுக்கு உதவுவீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
  • ரிஷப ராசிக்காரர்களுக்கு கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். உறவினர் நண்பர்களுடன் மனம் விட்டுப் பேசி மகிழ்வீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உயரதிகாரிசிலசூட்சுமங்களை சொல்லித்தருவார். தொட்டது துலங்கும் நாள்.
  • மிதுன ராசிக்காரர்களுக்கு மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக்கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புதுமை படைக்கும் நாள்.
  • கடக ராசிக்காரர்களுக்கு நட்பு வட்டம் விரியும். அரசு அதிகாரி உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள்.  புது வேலை கிடைக்கும். வெளியூரில் இருந்து நல்ல செய்தி வரும். அரசால் அனுகூலம் உண்டு. தாயாருக்கு கை, கால் வலி வந்து போகும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். நன்மை கிட்டும் நாள்.
  • சிம்ம ராசிக்காரர்களுக்கு தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரி பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.
  • கன்னி ராசிக்காரர்களுக்குகடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் நீங்கும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.
  • துலாம் ராசிக்காரர்களுக்குராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிலரின் விமர்சனங்களுக்கும் கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். நீங்கள் ஒன்று பேசப்போய் மற்றவர்கள் அதைவேறு  விதமாக புரிந்துகொள்வார்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் வேண்டாம். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.
  • விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஒரு விஷயத்தை நினைத்து அதிகளவில் குழப்பம் அடைவீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளுங்கள். உடல் அசதி சோர்வு வந்து நீங்கும். சாலைகளை கவனமாக கடந்து செல்லுங்கள்.வியாபாரத்தில் லாபம்கணிசமாகஉயரும்.உத்தியோகத்தில்சகஊழியர்களால்சங்கடங்கள்வரும்.போராடிவெல்லும்நாள்.
  • தனுசு ராசிக்காரர்களுக்கு எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில் சில நுணக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். சிறப்பான நாள்.
  • மகர ராசிக்காரர்களுக்கு உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கு ஏற்ப மாற்றி அமைத்துகொள்வீர்கள். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். ஆர்வமாக ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். நன்மைகள் நடக்கும் நாள்.
  • கும்ப ராசிக்காரர்களுக்கு கடந்த இரண்டு நாட்களாக இருந்த கூச்சல் குழப்பம் நீங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன விசேஷங்கள் உடனே முடியும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்தியோகத்தில்  உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.
  • மீன ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சில நேரங்களில் வெறுப்பாகப் பேசுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்து கொடுத்து போவது நல்லது. உங்களை யாரும் கண்டுகொள்வதில்லை உங்களுக்கு முக்கியத்துவம் தருவதில்லை என்றெல்லாம் சில நேரங்களில் புலம்புவீர்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் மறைமுக அவமானம் வந்து நீங்கும். நாவடக்கம் தேவைப்படும் நாள்.