இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

Today 6 1
Today 6 1

மேஷம்

எதையும் சாதிக்கும் துணிச்சல் பிறக்கும். பெற்றோரின்ஆதரவு பெருகும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். மதிப்புக் கூடும் நாள்.

ரிஷபம்

சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.

மிதுனம்

கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல் டென்ஷன்கோபம் யாவும் நீங்கும்.குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். தொழில் விருத்திஉண்டாகும். புது அத்தியாயம் தொடங்கும்நாள்.

கடகம்

சந்திராஷ்டமம் இருப்பதால் கொஞ்சம் அலைச்சலும் சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும்.குடும்பத்தில் பல விஷயங்களை நீங்களே பார்க்க வேண்டி வரும். வியாபாரம் தொடர்பாக வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் சின்ன சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேண்டியிருக்கும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

சிம்மம்

உங்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகரிக்கும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயம் உண்டு. திறமைகள் வெளிப்படும் நாள்.

கன்னி

குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வெளிவட்டாரத்தில் புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் அதிகாரிகள் புதுபொறுப்பை ஒப்படைப்பார். தொட்டது துலங்கும் நாள்.

துலாம்

புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள்.

விருச்சிகம்

எதிர்ப்புகள் அடங்கும்.பழைய நண்பர்கள் உதவுவார்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். வியாபாரத்தில் பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். தடைகளைத் தாண்டி வெல்லும் நாள்.

தனுசு

உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். அரசு காரியங்கள் நல்லவிதத்தில் முடியும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். வெற்றி பெறும் நாள்.

மகரம்

கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும்.வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். நல்லது நடக்கும் நாள்.

கும்பம்

ராசிக்குள் சந்திரன் செல்வதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல்தடை தாமதங்கள் ஏற்படும். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.

மீனம்

எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து போகும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். அரசு காரியங்களில் அலட்சியம்வேண்டாம். அசதி சோர்வு வந்து விலகும் . வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வரக்கூடும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.