இன்று பணவரவு அதிகரிக்கும் ராசிக்காரர் நீங்களா?

17
17

  • மேஷ ராசிக்காரர்களுக்கு அரசு அதிகாரிகள் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும். வியாபாரத்தில் திடீர்லாபம் உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். தடைகளை தாண்டி முன்னேறும்நாள்.
  • ரிஷப ராசிக்காரர்களுக்கு உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக்கொள்வார்கள். துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில்சிலநுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். வெற்றி பெறும் நாள்.
  • மிதுன ராசிக்காரர்களுக்கு கடந்த இரண்டு நாட்களாக இருந்த காரியத் தடைகள் நீங்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்தியோகத்தில் புதுவாய்ப்புகள் தேடி வரும். நன்மை நடக்கும் நாள்.
  • கடக ராசிக்காரர்களுக்கு ராசிக்குள் சந்திரன் இருப்பதால் பல வேலைகளை நீங்களே பார்க்க வேண்டி வரும்.  நண்பர்கள் உறவினர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். சிறுசிறு அவமானங்கள் வந்து நீங்கும். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களால் சச்சரவு வரும். உத்தியோகத்தில் அலுவலக ரகசியங்களைவெளியிடவேண்டாம்.கவனமுடன்செயல்பட வேண்டிய நாள்.
  • சிம்ம ராசிக்காரர்களுக்கு சின்ன சின்ன வேலைகளையும் அலைந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்தியோகத்தில் மற்றவர்களை விமர்சிக்க வேண்டாம்.  விழிப்புடன் செயல்பட வேண்டிய‌ நாள் .
  • கன்னி ராசிக்காரர்களுக்கு வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும்.குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். இனிமையான நாள்.
  • துலாம் ராசிக்காரர்களுக்கு பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின்நிர்வாகத்திறமைவெளிப்படும்.   புத்துணர்ச்சி பெருகும் நாள்.
  • விருச்சிக ராசிக்காரர்களுக்கு கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். பணவரவு திருப்தி தரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் உங்கள்உழைப்பிற்குஅங்கீகாரம்கிடைக்கும்.மாற்றம்ஏற்படும் நாள்.
  • தனுசு ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் சிறுவார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடிய வாய்ப்பு இருக்கிறது. தர்ம சங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை குறை கூறிக் கொண்டிருக்கவேண்டாம்.பொறுமையுடன்செயல்படவேண்டிய நாள்.
  • மகர ராசிக்காரர்களுக்குசவாலாக தெரிந்த சிலவேலைகள் சாதாரணமாக முடியும்.பிள்ளைகளால் அந்தஸ்து உயரும்.கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். காரிய சாதனை செய்யும் நாள்.
  • கும்ப ராசிக்காரர்களுக்கு குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள்.  உத்தியோகத்தில் உயரதிகாரிகள்ஆதிசக்கும் படி நடந்து கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.
  • மீன ராசிக்காரர்களுக்கு பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். நட்பு வட்டம் விரிவடையும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். அதிர்ஷ்டம் நிறைந்த நாள்.