இன்று முற்கோபத்தை குறைக்கவேண்டிய ராசிக்காரர் நீங்களா?

01
01
  • மேஷ ராசிக்காரர்களுக்கு குடும்பத்தாரின் ஒத்துழைப்பு இருக்கும். நம்பிக்கைக்குரியவர்களை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும்.உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். சிறப்பான நாள்.
  • ரிஷப ராசிக்காரர்களுக்கு சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். கடமை உணர்வுடன் செயல்படும் நாள்.
  • மிதுன ராசிக்காரர்களுக்கு உணர்ச்சிபூர்வமாக பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள் செயல்படுவீர்கள். பிள்ளைகளின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் தருவீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.வியாபாரத்தில்புதியமுயற்சிகள்பலிதமாகும்.அலுவலகத்தில்ஊழியர்களின்ஒத்துழைப்புஅதிகரிக்கும்.மாற்றம்ஏற்படும் நள்.
  • கடக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப் பாருங்கள். பழைய கசப்பான சம்பவங்களை எல்லாம் யாரிடமும் விவாதிக்க வேண்டாம். வியாபாரத்தில் பற்றுவரவு சுமார்தான். உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக்கொள்வது நல்லது. விழிப்புடன் இருக்க வேண்டிய நாள்.
  • சிம்ம ராசிக்காரர்களுக்கு கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். புது நட்பு மலரும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர்களால் உதவிகள் உண்டு. வியாபாரத்தில் லாபம் வரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.
  • கன்னி ராசிக்காரர்களுக்கு சின்ன சின்ன சந்தர்ப்பங்களையும் வாய்ப்புகளையும் பயன்படுத்தி கொள்வீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின்புதியமுயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். அமோகமான நாள்.
  • துலாம் ராசிக்காரர்களுக்கு புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் நட்பால் ஆதாயமும் உண்டா கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
  • விருச்சிக ராசிக்காரர்களுக்கு கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுக் கூர்ந்து மகிழ்வீர்கள். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.
  • தனுசு ராசிக்காரர்களுக்கு திட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உங்களிடம் பழகும் நண்பர்கள் உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சிலர் உங்கள் உதவியைநாடுவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். தைரியமுடன் செயல்படும் நாள்.
  • மகர ராசிக்காரர்களுக்கு குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். உற்சாகமான நாள்.
  • கும்ப ராசிக்காரர்களுக்கு ராசிக்குள் சந்திரன் இருப்பதால் முன்கோபத்தை குறையுங்கள். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். இரண்டாவது முயற்சியில் சில காரியங்கள் முடியும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். கவனமுடன் இருக்க வேண்டிய நாள்.
  • மீன ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். யாருக்கும் சாட்சிக் கையெழுத்திட வேண்டாம். உறவினர் நண்பர்களுடன் வீண் விவாதம் வந்து போகும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் அதிகரிக்கும். நிதானமுடன்  இருக்க வேண்டிய நாள்.