இன்றையநாள்( 20டிசம்பர்) உங்களுக்கு எப்படி?

Up Country Lindhula Hospital 2 5
Up Country Lindhula Hospital 2 5

மேஷம்:

வரவேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர்கள், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் சவால்களை சாதாரணமாக முடிப்பீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: குடும்பத்தினரின் ஆதரவு பெருகும். நீண்டநாள் பிரார்த் தனைகளை நிறைவேற்றுவீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். புதுமை படைக்கும் நாள்.

மிதுனம்

மிதுனம்: பழைய பிரச்சினைகளுக்கு சுமுக தீர்வு காண்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும்.பணப்பற்றாக்குறை இருந்தாலும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். புது வேலை அமையும் வியாபாரத்தில், பங்குதாரரின் பிரச்சினைத் தீரும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

கடகம்

கடகம்: திட்ட வட்டமாக சிலமுக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும். வியாபாரத்தில் சரக்குகளை கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில். அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். வெற்றி கிட்டும் நாள்.

சிம்மம்

சிம்மம்: இதுவரை குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல் குழப்பம் விலகும். அழகும், இளமையும் கூடும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். புதியவரின் நட்பால் உற்சாகம் அடைவீர்கள். வியாபாரத்தில் முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். புதிய பாதை தெரியும் நாள்.

கன்னி

கன்னி: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். வீட்டிலும், வெளியிலும் மற்றவரை அனுசரித்துப் போங்கள் முன்கோபத்தால் பகை உண்டாகும். லேசாக தலை வலிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள், தவறுகளைச் சுட்டிக் காட்டினால். மாற்றிக்கொள்வது நல்லது. நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.

துலாம்

துலாம்: எடுத்த வேலைகளை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். வாகன பயணங்களில் கவனம் தேவை. முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். உத்தியோகத்தில் மேலதிகாரியிடம் மோதல்கள் வேண்டாம். போராடி வெல்லும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: ஆன்மிகப் பெரியோர் களின் ஆசிகிட்டும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உங்களால் மற்றவர்கள் ஆதாயம் அடைவார்கள். புதிய பொருள் வந்து சேரும். வியாபாரத்தில் வாடிக்கையாளரின் ரசனையைப் புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமை வெளிப்படும். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.

தனுசு

தனுசு: சொன்ன சொல்லைக் காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். சொந்த பந்தங்கள் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். உங்களால், வளர்ச்சியடைந்த சிலரைச் சந்திப்பீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும் முயற்சிகள் பலிதமாகும் நாள்.

மகரம்

மகரம்: இதுவரை கணவன், மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.

கும்பம்

கும்பம்: சந்திராஷ்டமம் தொடர்வதால், தெளிவான முடிவு எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். குடும்பத்தில், உள்ளவர்கள், உங்கள் நிறை, குறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள். உடல்நலம் பாதிக்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை பகைத்து கொள்ளாதீர்கள். எதிர்பார்ப்புகள் தாமதமாக முடியும் நாள்.

மீனம்

மீனம்: உங்களுடைய அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புக்கள் வரும். சகோதரர்கள் உங்கள் வளர்ச்சிக்குப் பக்கபலமாக இருப்பார்கள். கல்யாண, பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். வாகனத்தை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். திறமைகள் வெளிப்படும் நாள்.