இன்றையநாள்( 21டிசம்பர்) உங்களுக்கு எப்படி?

Up Country Lindhula Hospital 2 6
Up Country Lindhula Hospital 2 6

மேஷம்

சவாலான வேலைகளை யும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் உங்கள் பேச்சிற்கு மதிப்பு அதிகரிக்கும். கல்யாண பேச்சு வார்த்தை சாதகமாக அமையும். வியாபாரத்தில் புதிய சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். திறமை வெளிப் படும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். வழக்கு விஷயங்கள் சாதகமாக மாறும். அரசால் அனுகூலம் உண்டு. அதிகாரப்பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில், உங்கள் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். தொட்டது துலங்கும் நாள்.

மிதுனம்

மிதுனம்: புதிய திட்டங்களைத்தீட்டுவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டு. அண்டை அயலாரின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். புதுமை படைக்கும் நாள்.

கடகம்

கடகம்: எதிர்பார்த்த சில விஷயங்கள் தள்ளிப்போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாயாருடன் மோதல்கள் வந்து நீங்கும். வரவேண்டிய பணத்தைப் போராடி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரைச் சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். போராடி வெல்லும் நாள்.

சிம்மம்

சிம்மம்: தன்னிச்சையாகவும், தைரியமாகவும், சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள், ஒத்தாசையாக இருப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். உத்தியோகத் தில், அதிகாரிகளிடம் நெருக்கமாவீர்கள். வெற் றிக்கு வித்திடும் நாள்.

கன்னி

கன்னி: கணவன், மனைவிக்குள் அன்பும், ஆதரவும் அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். நீண்டநாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். பண வரவு உயரும். உறவினர்களின் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் தலைமை யின் நம்பிக்கையை பெறுவீர்கள். மகிழ்ச்சி தங்கும் நாள்.

துலாம்

துலாம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால், இனம் புரியாத பயம் வந்து போகும். கணவன், மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்துச்செல்லும். உடல் நிலையில் பாதிப்பு ஏற்படும். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சனை உருவாகும். உத்தியோகத்தில், எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாகும். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: உங்கள் வேலைகளை முடிக்க அதிக. அலைச்சலும் பிரச்சனைகளும் ஏற்படும். உறவினர்கள், நண்பர்கள், பணம் கேட்டுநச்சரிப்பார்கள். யாரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம். வியாபாரத்தில், போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில், மறைமுகப் பிரச்சினைகள் வந்து செல்லும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

தனுசு

தனுசு: எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றிப் பெறுவீர்கள். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். வெளி வட்டாரத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில், சூட்சமங்களை உணர்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சிறப்பான நாள்.

மகரம்

மகரம்: எதையும் சமாளிக்கும் சாமார்த்தியம் பிறக்கும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மனதிற்கு இதமான செய்தி வரும். உத்தியோ கத்தில், அதிகாரிகளுக்கு உங்களைப் பற்றி நல்ல அபிப்ராயம் உண்டாகும். உதவிகள் கிட்டும் நாள்.

கும்பம்

கும்பம்: கடந்த இரண்டு, மூன்று நாட்களாக குடும்பத்தில் இருந்த கூச்சல், குழப்பங்கள் நீங்கி, மகிழ்ச்சி தங்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். புதுப்பொருள் வந்துசேரும். வியாபாரத்தில் தள்ளிப்போன வாய்ப்புகள் தேடிவரும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார், திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.

மீனம்

மீனம்: சந்திராஷ்டமம் தொடர்வதால், புதிய முயற்சிகள் தள்ளிப்போய் முடியும். உங்களை, நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப்போகும். உத்தியோகத்தில், அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும் அலைச்சல் அதிகரிக்கும் நாள்.