இன்றையநாள்( 22டிசம்பர்) உங்களுக்கு எப்படி?

Up Country Lindhula Hospital 2 7
Up Country Lindhula Hospital 2 7

மேஷம்:

குடும்பத்தினருடன் ஆரோக்கியமான விவாதம் வந்து போகும். புதியவரின் நட்பால் உற்சாகம் அடைவீர்கள். வீட்டை விரிவுபடுத்துவீர்கள். வியாபாரத்தில் கூட்டாளிகளால் நன்மை உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். நல்லது நடக்கும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: கனிவாகப் பேசி காரியங்களை சாதிப்பீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை, மற்றவரிடம் சொல்லி மகிழ்வீர்கள்.நீண்ட நாளாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்களைச் செய்து லாபத்தை அதிகரிப் பீர்கள். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும், சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். அமோகமான நாள்.

மிதுனம்

மிதுனம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையும் கொடுக்க கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்கள் எதிர்பார்ப்புடன் பேசுவார்கள். பழைய கடன் பிரச்சினையில் ஒன்று தீரும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

கடகம்

கடகம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வீடு, வாகனப் பராமரிப்பு செலவுகள் அதிகமாகும். வெளிவட்டார நட்புதொடர்புகள் விரிவடையும். வியாபாரத்தில் அதிரடி சலுகை மூலமாக லாபம் அடைவீர்கள். உத்தியோகத்தில் பணிகளைப் போராடி முடிப்பீர்கள். எதிர்பாராத உதவி கிட்டும் நாள்.

சிம்மம்

சிம்மம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகளால் சொந்த பந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்குப் பாராட்டு கிடைக்கும். வெற்றி பெறும் நாள்.

கன்னி

கன்னி: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பழைய பிரச்சினைகளுக்கு, மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். புண்ணியஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். புதியவர்கள் நண்பர்கள் ஆவார்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். நிம்மதி கிட்டும் நாள்.

துலாம்

துலாம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை, பலமுறை அலைந்து திரிந்து முடிப்பீர்கள். உங்களின் அணுகுமுறையை மாற்றிக்கொள்வது நல்லது. உத்தியோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். யாருக்காகவும், சாட்சி கையெழுத்திட வேண்டாம். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும்.வியாபாரம் மந்தமாக இருக்கும். நிதானம் தேவைப்படும் நாள்.

தனுசு

தனுசு: குடும்பத்தில் அனைவருடனும் மனம் விட்டுப் பேசி மகிழ்வீர்கள். பிரியமானவர் களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். புகழ் , கௌரவம் கூடும். நாள்.

மகரம்

மகரம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன் பிறப்புகள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள். வேற்று மதத்தவர் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சிகரமானதாக அமையும். புது தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி பெறும். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். இனிமையான நாள்.

கும்பம்

கும்பம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு கிட்டும். சாதிக்கும் நாள்.

மீனம்

மீனம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால், உணர்ச்சி வசப்படாமல். அறிவுப் பூர்வமாக முடிவெடுக்கப் பாருங்கள். முன்கோபத்தைக் குறைப்பது நல்லது. உங்களின், பலம் மற்றும் பலவீனம் அறிந்து செயல்படுங்கள். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. விழிப்புணர்வு தேவைப்படும் நாள்.