- மேஷ ராசிக்காரர்களுக்கு ராசிக்குள் சந்திரன் இருப்பதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். சில நேரங் களில் நன்றி மறந்த சொந்தங்களை நினைத்து வருத்தப்படுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கடிந்து கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் கவனம்செலுத்துவதுநல்லது.திட்டமிட்டுசெயல்படவேண்டிய நாள்.
- ரிஷப ராசிக்காரர்களுக்கு குடும்பத்தினரை அனு சரித்து போங்கள். செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர் கள். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. போராடி வெல்லும் நாள்.
- மிதுன ராசிக்காரர்களுக்கு குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். வெளிவட்டா ரத்தில் அந்தஸ்து உயரும். மற்றவர்கள் மனதை புரிந்துகொள்ள தொடங்கு வீர்கள். சுற்றி இருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். புகழ் கௌரவம் கூடும் நாள்.
- கடக ராசிக்காரர்களுக்கு நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். உறவினர் நண்பர்களால் ஆதாயமுண்டு. உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வாகன வசதி பெருகும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். கடமை உணர்வுடன் செயல்படும் நாள்.
- சிம்ம ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் கலகலப் பான சூழல் உருவாகும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். உறவினர்களின் ஆதரவுக் கிட்டும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.
- கன்னி ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் நீடிப்பதால் ஒரே நாளில் முக்கியமான நான் கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். இதை முதலில் முடிப்பதா அதை முதலில் முடிப்பதா என்ற ஒரு டென்ஷன் இருக்கும். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப்போகும். உத்தியோ கத்தில் சக ஊழியர்களால் பிரச்னை வரும். கவனமுடன் இருக்க வேண்டிய நாள்.
- துலாம் ராசிக்காரர்களுக்கு பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்று கொள்வார்கள். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. தாயாரின் உடல் நிலை சீராகும். புது நட்பு மலரும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்று கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
- விருச்சிக ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத பணவரவு உண்டு. உங்களிடம் பழகும் நண்பர்கள் உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். தொட்டது துலங்கும் நாள்.
- தனுசு ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப் பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். அக்கம்- பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். யோகா தியானத்தில் மனம் லயிக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள். கனவு நனவாகும் நாள்.
- மகர ராசிக்காரர்களுக்கு திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பயணங் களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். புது பொருள் சேரும். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். வெற்றி பெறும் நாள்.
- கும்ப ராசிக்காரர்களுக்கு உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந் தவர்கள் உறுதுணையாக இருப் பார்கள். சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உயரதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.
- மீன ராசிக்காரர்களுக்கு கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். உறவினர் களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.