இன்று எதிர்பாராத பணவரவு உள்ள ராசிக்காரர் நீங்களா?

9
9
  • மேஷ ராசிக்காரர்களுக்கு கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உறவினர் நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். வெற்றி பெறும் நாள்.
  • ரிஷப ராசிக்காரர்களுக்கு உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். தோற்றப் பொலிவு கூடும். பயணங்கள் சிறப்பாக அமையும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பீர்கள். வியாபாரம் செழிக்கும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.
  • மிதுன ராசிக்காரர்களுக்கு ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். இரண்டாவது முயற்சியில் சில காரியங்கள் முடியும். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.
  • கடக ராசிக்காரர்களுக்கு கணவன்-மனைவிக்குள் வீண் விவாதம் வந்து நிற்கும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். சகோதர வகையில் மனத்தாங்கல் வந்து நீங்கும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். பொறுமைத் தேவைப்படும் நாள்.
  • சிம்மம்: எங்குச் சென்றாலும் மதிப்பு மரியாதைக் கூடும். பழைய சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். இனிமையான நாள்.
  • கன்னி ராசிக்காரர்களுக்கு எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். கணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரம் ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். திட்டங்கள் நிறைவேறும் நாள்.
  • துலாம் ராசிக்காரர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். புண்ணியஸ்தலம் சென்று வாருவீர்கள். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் புது சலுகைகள்  கிடைக்கும். சாதிக்கும் நாள்.
  • விருச்சிக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் நீடிப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்தியோகத்தில் மறைமுகநெருக்கடிகளைசமாளிப்பீர்கள். கவனம் தேவைப்படும் நாள்.
  • தனுசு ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். விருந்தினர்களின் வருகை உண்டு. பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில்சகஊழியர்கள் உதவுவார்கள். மகிழ்ச்சியான நாள்.
  • மகர ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அரசாங்கத்தாலும் அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் அடைவீர்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். காரியம் சாதிக்கும் நாள்.
  • கும்ப ராசிக்காரர்களுக்கு புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். புதியவர்கள் அறிமுகமாவார்கள். அக்கம்- பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். புது தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில்  முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.  தேவைகள் பூர்த்தியாகும் நாள்.
  • மீன ராசிக்காரர்களுக்கு நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவது குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பாராத உதவி கிட்டும் நாள். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள்.